நண்பா..

images

நண்பா கடவுள் எனக்கு
அளித்த காணிக்கை நீ
நீ இருக்கையில் என்ன
கவலை இனி எனக்கு
இன்பமாய் நகரும்
இனிமையாய் முடியும் என்
நாட்கள் அனைத்தும் !

வாழ்நாளில் ,
நான் நினைத்து மகிழும்
நீங்காத என் நினைவுகளின்
ஓட்டுமொத்த நினைவுகல் நீ !

கடவுளுக்கும் கிடைக்காத பரிசு
நண்பன் , எந்த நண்பனுக்கும்
கிடைக்காத நண்பன் என்
நண்பன் நீ !

ஈன்ற தாயின் அன்பும்
ஈன்ற தந்தையின் அறிவும்
உடன் பிறந்தோர்களின் அணைப்பும்
உன் உருவில் கண்டேன்
ஒன்றாய் !

உன் அன்னை படைத்தாள்
உன்னை ஒரு முகத்தோடு
ஆனால் பன்முகம் கொண்டாய் எனக்காக
என் காதலின் தூதுவனாய்
என் மணநாள் தோழனாய்
என் எதிரிகளின் எதிரியாய் நீ நண்பா !

போட்டி உண்டு எங்களுக்குள்
யார் அன்பு செலுத்துவதில் அதிகம் என்று
பொறாமை உண்டு எங்களை
பார்க்கும் மற்றவர்களுக்குள் யார் இவர்கள்
நிகழ்கால கர்ணனா – துரியோதரன
என்று !

நம் நட்பிற்கு மரணமே
இல்லை நண்பா
நம் நினைவுகளால் மட்டும்
இல்லை நண்பா
நம் நட்பை பற்றி என்றும்
பேசும் மனிதர்களின் மூலமாகவும்
தொடரும் பல நூற்றாண்டுகளை
கடந்தும் !


அன்னை ப்ரியன் மணிகண்டன்

Advertisements

என் நண்பன்…

My-Friend-tamar20-28344922-795-595

தெருவெல்லாம் தேவதைகள் நிறைந்திருக்க
அதைப் பாடக் கவிஞர் பலர் பிறந்திருக்க
அதனாலே நம் நட்பு மறைந்திருக்க
வருகிறேன் தமிழோடு அதன் பெருமை நிலைநிறுத்த!!

உனைப் போல் நண்பனைத் தேடி
எனைப்போல் அலைந்திடும் உயிர்களும் கோடி
உயிராய் இருக்கும் நண்பனே ,
நீயோ எனக்குள் ஒருவன்
உனை நான் பெற்றதால்
நானோ ஆயிரத்திலொருவன் !!

ஊரெல்லாம் திரிந்தோம்
ஓய்வின்றி அலைந்தோம்
அளவின்றிச் சிரித்தோம்
அழகுத் தேவதைகளை ரசித்தோம்!!

தொலைவால் தொலையாது நம் நட்பு
என அறிந்தும் ,
உண்மைகள் புரிந்தும்
நீ பிரிவதை நினைந்திடும் பொழுது
கண்களின் ஓரம்
வழிந்திடும் துளிகளால் ஈரம் !!!

நடித்திடும் உலகில்
துடித்திடும் உறவாய் வந்தவனே ,
சிரித்திடும் பொழுதும்,
கலங்கிய பொழுதும்
துணையாய் என்னுடன் நின்றவனே !!

தென்றல் தொட்டுச் சென்றால் இனிமை
நட்பு விட்டுச் சென்றால் தனிமை
இனிமையைக் கண்டேன் அன்று
தனிமையில் நின்றேன் இன்று !!

கவலைகள் வேண்டாம்
பிரிவினால் கலங்கிட வேண்டாம்
சென்ற வினையைச் சிறப்பாய் முடித்திடு
சிறகடிக்கும் பறவையாய் பறந்திடு

தமிழ் மொழியின் அன்பனாய்
இயற்றினேன் பலக் கவிதை
பிரிந்திடும் நண்பனாய்
பிரியா நட்புடன் முதல் கவிதை..

—————————————————————————-

நிரஞ்சன்

எங்கே அந்த காலம்.?

50

எங்கே போனாய்
என் நெஞ்சினில்
காயதழும்பை பதித்துவிட்டு
போன இடம் சொல்
வானமானாலும் வந்துவிடுகிறேன் …………..

புத்தக பையை வீட்டில்
வைத்துவிட்டு
புழுதி காட்டில்
விளையாடிய போது
விண்ணில் பறந்த கொக்கை பார்த்து
“கொக்கை கொக்கை பூ போடு ”
கோவில் வாசல் திறந்து பூ போடு ”
என் கையை சுற்றி பூ போடு ”
ஆடி பாடி முடிந்ததும்
நககண்ணில் வெள்ளை பார்த்து பூ போட்டது
முககண்ணில் முளைத்த அந்த சில நேர சுவனம் எங்கே ?

கட்டம் கட்டி
கால் நொண்டி அடித்து
கண்மூடி பாண்டியில்
“ரைட்டா ம்ம் ரைட் ரைட்டா ம்ம் ரைட் ”
ரைட்டா ம்ம் ரைட் ரைட்டா ஏய்ய்ய்ய் ராங் ”
கைகளின் ஆடிய அந்த சங்கீத சாரல் எங்கே ?

சில மணித்துளிகள்
பாச பிரிவு கோடு போட்டு
பூபரித்த
“பூ பறிக்க வருகிறோம்”
“பூப்பறிக்க வருகிறோ ”
“எந்த பூவை பறிக்க வருகிறீகள் ”
“எந்த பூவை பறிக்க வருகிறீகள்”
“பிச்சி பூவை பறிக்க வருகிறோம் ”
“பிச்சி பூவை பறிக்க வருகிறோம் ”
“யாரை விட்டு அனுப்புகிறீர்கள் ”
“யாரை விட்டு அனுப்புகிறீர்கள் ”
“தப்ரேஜை விட்டு அனுப்புகிறோம் ”
“தப்ரேஜை விட்டு அனுப்புகிறோம் ”
எங்களுக்குள் இழுத்து ஆடிய
அந்த ஆட்டம் எங்கே ?

இருபது விரல் கோபுரம் கட்டி
ஒருவர் பின் ஒருவர் நீர் எடுத்த
“ஒரு குடம் தண்ணிஎடுத்து
ஒரு பூ பூத்திச்சாம் ”
பாச வலையின் கையில் சிக்கிய
என்னை தூக்கி போட்ட என்
நண்பர்களின் கபடமில்லா சிரிப்பு எங்கே?

பட்ட பெயர் வைத்து
கண் மூடிக்கொண்டு
பட்ட பெயர் அழைத்து
“வா வா வந்து கொட்டிவிட்டு போ”
நறுக் என கொட்டி வீட்டு
பூமியில் முத்தமிட்ட கொண்டு இருப்போம்
யார் யன்று கண்டுபிடிக்க வேண்டும்
அந்த தலை கொட்டு அப்போது
தலையில் வலி இல்லை இப்போது
நெஞ்சில் வலி போகல

அம்மா வைத்த ரசத்தில்
சும்மா பிறக்கிய
புளியங் கோட்டையில்
பல்லாங் குழி விளையாடிய
அந்த தாவணி போட்ட மங்கை எங்கே?

எழுதிய போது
விழி விட்ட நீர்
கையில் பட்டதும் தொடர முடியவில்லை.

—————————————————————————-
Muthuraja G

அன்பு தோழி சத்யாவிற்கு..

chvaq_238959

அன்பு தோழிக்காக ….

என் அன்பு தோழியவள் …

அம்மயிலின் அழகு
முகம் இன்னும் கண்டதில்லை …

அக்குயிலின் குரலிசை
மட்டும் கேட்டுள்ளேன் ….

முகவரி மட்டும் இருவருக்கும்
எழுத்து தளமே …

அன்பினை நட்பெனும்
சாரல் மழையில்
தூது விடுகிறாள்….

கண்கலங்கும் நேரங்களில்
மயில் இறகாய் வருடி
விடுகிறாள் ஆறுதலான
வார்த்தைகளில் …

பெயருக்கு பழகி
செல்லும் உறவுகளுக்குமுன்
நட்பெனும் உறவுக்காக
பழகும் பதுமையவள் ….

தாயாக தோள்
கொடுப்பவள் என்
இன்ப துன்பங்களை புதைக்க …

மணவாழ்க்கை இனிதே
அமைய வேண்டுகிறேன் என்
அன்புத் தோழியவளுக்கு ….

நல்வண்ணமாய் நல்லறம்
அமைய வாழ்த்துகிறேன் ….

மணமாலை அவள் சூட
பெண்தோழியாய் அவளருகில்
நான் வேண்டும்…..

இன்றல்ல என்றுமே
நம் நட்பு தொடரும் வரம்
வேண்டுமடி தோழி….

(என் அன்புத்தோழி சத்யாவிற்கு சமர்ப்பணம்….)

என் நண்பனுக்காக.!!

friends-in-the-blogosphere

விட்டுப் பிரிகையில்
வலிக்கவில்லை..
உன் நினைவு
என்னை தொட்டு தொடர்கையில்
வலிக்கிறது..
விழியோரம் வழிகிறது
கண்ணீர் துளிகள்…

அற்முகம் ஆகிய
முதல் நொடி முதல்
இன்று நீ பிரிந்த
இந்த நொடி வரை,
நட்பை நேசித்து
பயணித்தோம்,
வாழ்க்கை பாதையில்….

உன் பயணத்தின்
வழித்தடம் மாற்றி
விலகி செல்கிறாய்,
வருந்துகிறேன் ,
விட்டு விலகி செல்கிறாய் என்று…

எங்கே செல்கிறாய்
இங்கே தானிருக்கிறாய்,
என்னுள் ,
நம் நட்புள்…
நம் நினைவுகளில்
நாம் செய்த சேட்டையின்
நினைவுகள்,
நினைவூட்டிக் கொண்டேயிருக்கும்
நம் நட்பை…

கண்டங்கள்
கடந்து சென்றாலும்,
என் உள்ளத்தில்
நீ நின்றாய்..
உன் வரவை நோக்கி
என் மனம் தவம் கிடக்கிறது..
உன் அழைப்புக்காக
என் கைபேசி ஏங்கி தவிக்கிறது..

வந்து விடு நண்பா
விரைவில்…

என்னை விட்டு தூர தேசம் சென்ற என் அன்பு தோழன் சிவா
சமர்பிக்கிறேன்……

நட்பு வனம் நீ..!

எனக்கு நட்பு நடத்திய
நட்பு வனம் நீ
எனக்கு நண்பனாய் வந்து
தாயுமானவனே
தந்தை போல் நின்றவனே
பிள்ளை போல் சுமந்தவனே
உனக்குள் கருவறை இருந்திருந்தால்
மீண்டும் உயிர் கொண்டிருப்பேன் அதில்..

என் கைக்குள் அடங்கிய
நட்பு வானமே…!
உன் தோள்களுக்குள் தொலையும் வரை
புரியவில்லை எனக்கு தோழமையின் வலிமை…
வாழ்வை நட்புமயமாக்கினாய்
நந்தவனமாக்கினாய்
உனக்கு சொந்தமானவனாக்கினாய்

எந்தன் மானம்
உந்தன் மானம் என்றாக்கினாய்
உந்தன் மனம்
எந்தன் மனம் என்று உணர்த்தினாய்
புது உலகம் என் வசம் ஆக்கினாய்

போதும் என்று உன்னிடம்
ஏதும் தோன்றவில்லை எனக்கு
மீண்டும் மீண்டும் உன் நட்புக்குள்ளே
உயிர் கொள்ளத் துடிக்கிறது மனது
இந்தியப் பெருங்கடல் கடந்து
எனக்கோர் இன்னொரு
இதயம் கண்டெடுத்திருக்கிறேன் நான் …!

புரிந்து கொண்டால்தான் காதலும் நட்பும்.!

Image

நண்பா…

நீயும் நானும் தெருவில்
கைகோர்த்து நடந்த போது
அறிமுகமானோம்…

என்னை பற்றி
உனக்கும்…

உன்னை பற்றி
எனக்கு தெரியும்…

காலத்தின் கட்டாயம்
நாம் பிரிந்திருக்க…

நான் அயல் நாட்டில்
நீயோ நம் நாட்டில்…

பாவை ஒருத்தியுடன்
உன் காதலை பகிர்ந்தேன் என்றாய்…

போலியான காதலுடன்
நெருங்குபவர்கள் பலர்…

நீ ஏமாந்துவிடாதே…

உன்னவளை பற்றி
எனக்கு தெரியாது…

அவள் எப்படி என்றும்
நான் அறிந்ததில்லை…

உனக்காக எதையும்
செய்வாள் என்றால்…

அவளுக்காக நீ
உயிரையும் கொடு…

என்னை போல்
உன்னை புரிந்து கொள்ள…

வேறொரு பாவை
இருக்கிறாள் சந்தோசம்…

அவள் உன் மீது
வைத்த அன்பை…

என்றும் வெறுக்காமல்
பார்த்து கொள்…

நீ வைத்த அன்பும்
மாறமல் பார்த்து கொள்…

உன்னவளும் நீயும்
சந்திக்கும் வேலை…

என்னை பற்றி
அதிகம் பேசாதே…

உன்னை முழுமையாக
புரிந்து கொண்டவள்…

அவளாகதான் இருக்க
என்னுவாள்…

நாம் சந்திக்கும் வேலை
பகிர்ந்து கொள்வோம்…

நம் நட்பை…

உன்னருகில் இருந்து
உன்னை காலமெல்லாம்…

பார்த்து கொள்ள
ஒருத்தி வந்துவிட்டாள்…

புரிந்து கொண்டால்தான்
காதலும் நட்பும்…

உனக்காக நான்
அவளுக்காக நீ என்றும்…

நட்புடன் உன் தோழன்…..

இப்பொழுது எங்கு இருக்கிறாய்.???

Image

 

மரணங்களும் மறையவில்லை
ரணங்களும் குறையவில்லை

வலிகளும் மறக்கவில்லை
வரைமுறைகளும் தெரியவில்லை

உணர்ச்சிகள் ஆறவில்லை
உண்மைகள் தூங்கவில்லை

போகிறபாதை புரியவில்லை
போனபாதை விளங்கவில்லை

எதற்காக வந்தோம்?
எங்கே போகிறோம் ?

எல்லாம்
யோசித்துகொண்டிருக்கிறேன்

எல்லாம்
மறந்துபோகும்
நீ
அருகிலிருந்தால்!!!

என் நண்பனே
இப்பொழுது
நீ
எங்கு இருக்கிறாய்?

தொலைத்த பால்யம்.!

Image எதனாலும் கலைக்க இயலாத பின்னிரவின் தூக்கம் வேலைமுடிந்து வரும் தந்தையின் சருவைத்தாள் பிரிப்பில் தானாக கலைவது அனிச்சைச்செயலாயிருந்தது.. அதிகபட்சம் இருபது ரூபாய்க்கான சில்லறைகளையே கொள்ளும் பாட்டியின் சுறுக்குப்பையும், அம்மாவின் சேலத்தளைப்புகளுமே நான் கண்டிருந்த கட்டற்ற சொர்க்கம்.. அம்மிக்கல்லில் அடித்து நொறுக்கப்படும்பொழுது சிதறும் தேங்காய்க்காய் காத்திருப்பேன் நான்.. வேண்டுமென்றே முரியையே சிதறடிப்பாள் ஆச்சி.. பம்பரம்.,கோலி.,கண்ணாமூச்சி., இலந்தை, கொடிக்காய் புளி.,மாங்காய் அடித்தல் அத்தனையும் கோடைக்கால உச்சி வெயிலில் சாகசங்களே.. தாமிரபரணி கரையோரம் கோரைப்புல் விரித்து மல்லாக்க படுத்து அரணா கயிறு மட்டும் அணிந்து வானம் பாத்து களித்திருந்தது என் பால்யம்.., இரும்புக்கை மாயாவியும் அதனுள் வைத்திருந்த, கூடியவிரைவில் குட்டிபோட ஏதுவாயிருந்த மயிலிறகும் வீடு மாறும்பொழுது என்பால்யம் தொலைத்தஅற்புதங்கள்.., தொலைந்த ஆலமரம், எழுப்பிவிடும் கோழி,பாசக்கார பசுமாடு, ஓளி வேகத்தில் பறந்த கனவுகள்,எதுவுமே இல்லை இப்போது ஆச்சியோடு எல்லாம் புதைத்து விட்டு இருந்தேன்..,. இன்றும் தேடிக்கொண்டிருக்கிறேன் என் பால்யத்துள் தொலைத்த என்னை.., ஒருவேளை என் இறந்த ஆச்சியுடன் என் பால்யத்தையும் புதைத்திருப்பேனோ..??????

என் உயிர் தோழனுக்காக.!

Image

கல்லில் வடித்த கவிதை போல….,
வானவில்லின் ஓவியம் போல….,
பேசும் பொற்சித்திரம் போல….,
இருளுக்குபின் வரும் ஜோதி போல….,
இதுவரை சொல்லாத கவிதை….
என் உயிர் தோழனுக்காக………………..!

தேவையின் போது தோள்களில் சாய…..,
துன்பத்தில் கண்ணீர் துடைக்க…..,
இன்பத்தை பகிர்ந்து கொள்ள
உள்ளத்தால் நினைக்கும்
உன் போன்ற நட்பு,
என் உயிருள்ளவரை வேண்டும்……!

திட்டினாலும் அடித்தாலும் முறைத்தாலும்
தாங்கி கொள்வான்……..,
அதிகமாக அழவைத்தும் சிரிக்க வைப்பான்
பேச பழக திட்ட கொஞ்ச
உரிமை தோழன்…….!

இனி உன்கைகளை பிடித்தபடி
கவலையின்றி நடப்பேன்
கடைசிவரை துணையாய் நீ
வருவாய் என்ற நம்பிக்கையுடன்……….!

நீ மௌனமாய் அழும் ஒவ்வொரு
நொடியும் உடன் இருப்பேன்
உன் கண்ணீரை துடைக்க
உரிமை தோழனாய்………………!

இனி உன் மனம்
சோர்ந்து போகும் போதெல்லாம்
உன் தாய்மடி தேவையில்லை……,
சோகம் தீர்த்து தோள்கொடுக்கும்
அன்புத் தோழனாய்
என்றுமே உன்னுடன் நான்…………….!

மரணமே வந்தாலும்
உன்னை மறக்காத இதயம்………..!
மறந்தும் நினைத்து விடாதே…
உன்னை மறப்பேன் என்று…………!

மீண்டும் ஒரு ஜென்மமிருந்தால்
என் தோழனாக நீ வேண்டும்……….!

என் துன்பங்களையும்
உன் தோளில் சுமந்தவனே
நீ எனக்கு நண்பன் அல்ல…….!
இன்னொரு தகப்பன்……..
உள்ளம் மறக்குதில்லை உன்னை………..!