இன்னும் மறக்க வில்லை..

wbegs_281132

1. உன்னை மறந்திருப்பேன் என நீ
நினைத்திருப்பாய்,
உன்னை மறக்க முடியாத வலிகளால்
பினைக்கப்பட்ட வாத்தையல்லவா
நான்….

°°°°°°°°°°°°°°°°°°

2. சந்தோசமாய் வாழ்கிறேன் என
எண்ணியிருப்பாய்,
எப்படி முடியும்
நான் வாழும் வாழ்க்கையின்
முழு வலிகளும்
நீ தந்த வரமல்லவா….

°°°°°°°°°°°°°°°°

3. முப்பது நாட்களில் உன்னை மறந்திருப்பேன்
என்றிருப்பாய்,
என்பது வருடங்கள் ஆனாலும்
உன்னைப் போல வருமா ஒரு உறவு?

°°°°°°°°°°°°°°°°

4. பேசாமல் விட்டிருப்தால்
உன் நினைவுகளை
தொலைத்திருப்பேன் என்றிருப்பாய்,
இன்னும் அதிகமாய் நான் சேமிக்கத்
தேடுவது உன் நினைவுகளை என்று தெரியாமல்

°°°°°°°°°°°°°°°°°°
5. பார்த்தும் பார்க்காமல் முகத்தை திருப்பிப் போனதால்
என்னென்ன நினைத்தாயோ….?
நான் நோக்கிடும் திசைகளில்
பார்க்க ஏங்கிடும்
ஒற்றை உயிர் நீ மட்டுமடி….

°°°°°°°°°°°°°°°°

6. எதை நினைத்து
நீ இன்னும் என்னைப் பாக்காமல்
இருக்றாயோ…?
நடை பாதையில்
என் கண்கள் உனைப் பார்க்க தவம் கிடக்கிறதே…….

°°°°°°°°°°°°°°°

7. உன்னோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்,
கற்பனைகள் மட்டுமே
நிறந்தரம் என தெரிந்த பின்பு
அங்கு ஒரு அழகான மாளிகை கட்டி
உன்னோடுதான் வாழ்ந்து கொன்டிருக்கிறேன்…..

°°°°°°°°°°°°°°°°°°°°
8. மௌனம் கொள்கிறாய்
உன் மௌனமே என் மரணம்
என் மரணம் வரை
உன் ஞாபகங்களே என் வாழ்வு..
என்று புரியாமல்…

°°°°°°°°°°°°°°°°

9. உயிரோடே பிரிந்தேன்
உயிர் போகும் வரை உனக்காக
இருக்கின்றேன்
உன்னை மட்டுமே எனக்காக கேட்கின்றேன்…..

======================================================================

மு. பா. அஸ்க்கியா

Advertisements

காதல்.. காதல்.. காதல்…

uxvne_279529

காதல்

அதுவொரு உணர்தல்
அதுவொரு புரிதல்

அதுதான் அமுது
அதுவேதான் நஞ்சு

அதுவுனை மாற்றும்
மேதையாகவும்
பேதையாகவும்

காதலுக்கு
சாதி ஒன்று
மதம் ஒன்று
இனம் ஒன்று
மொழி ஒன்று
நிறம் ஒன்று
உயிர் ஒன்று
துடிப்பு ஒன்று
இதயம் ஒன்று

நீ காதலை கண்டெடுத்தால்
காதல் உன்னில் கவிதையை கண்டெடுக்கு

காதல் மௌன
மொழிகளின்
அகராதி

காதல்
இன்புருத்துவதுமில்லை
துன்புருத்துவதுமில்லை

காதல்
ஒரு தனி சுகம்
சொன்னால் புரியாது
புரிந்து கொண்டவனுக்கும்
சொல்ல தெரியாது

காதல்
சொர்க்கத்தின் பிறப்பிடமும் அல்ல
நரகத்தின் வாழ்விடமும் அல்ல

அது
கண்ணுக்கு தெரியாத
காற்றினை போன்றது

காதல்
இல்லையென்பாரிடமும் இருக்கும்
இருக்குமென்பாரிடமும் இருக்கு

காதல்
ஒரு தாகம்
பருகினாலும் தணியாது
அதிலே மூழ்கினாலும் தெளியாது

அது மனதில் சிறகு கட்டி
இதயத்தில் ஊஞ்சல் பூட்டும் கலை

இமை திறப்பில்
நித்திரை நுழைத்தும்
இமை அணைப்பில்
நித்திரை கலைக்கும் இ(ம்)சை

குருதி ஓடையில்
ஓடிக்கொண்டே
கண்ணீர் கடலில்
மிதந்து வரும்
கானல்

நீர் திவளைக்குள்
ஒளிந்திருக்கும் கனல்
எரிமலைகளுக்குள்
உறைந்து கிடக்கும் பனி

பித்த நிலையின்
மொத்த சுகத்தையும்
நித்தமும் அளிக்க
வல்லமை படைத்த வரம்

வெண்மேக மேற்பரப்பில்
வசிப்பிடம் தேடி
நிலவொளி வெளிச்சத்தில்
நினைவு பெட்டகத்தை திறந்து
மிதக்க வைக்கும் போதை

பூக்களை முட்களோடும்
கோர்த்து தனக்குள்ளே
விற்று தீர்க்கும் பூக்காரி

காதலை
பாடுவதென்றால்

வார்த்தைகள்
வண்ணங்களோடு
நீண்டு கிடக்கும்

காகிதங்கள்
எரிந்து எரிந்து
மீண்டும் பிறக்கும்

தூரிகையின் குருதி
தீர்ந்து போனாலும்
காதலின் குருதி
அதில் நிரம்பி வழியும்

காதல் ஒரு மாயை என்றால்
மாயையும் காதலாகிவிடும்

காதல்
பிறப்பதில்லை
மலர்வதில்லை
உதிர்வதில்லை

காதல்
எங்கும்
வருவதும் இல்லை
போவதும் இல்லை

————————————————————————–

உதயா

தாயின் கண்ணீர்…

0043

அன்னை கற்பத்தில் பூக்காது
அனாதை காப்பகத்தில் பூத்தவனே
சேயாக வந்து எனை தாயாகப் பாத்தவனே
பெத்தெடுக்க முடியாம
நான் தத்தெடுத்த மூத்தவனே

தூளிமேல தூங்க வச்சா
துயில் கலைந்து போகுமேன்னு
தாலி மேல தூங்க வச்சேன்
வேலியெல்லாம் ஏங்க வச்சேன்
வலியெல்லாம் நீங்க வச்சேன்

நீ வளர்ந்து ஆளாகி
முத்திரைய பதிப்பேன்னு
சித்திர வெக்கையிலும்
உன்ன நித்திரைய வாங்க வச்சேன்

மணிக் குயிலா நான் வளத்தேன்
மனிதனாக நீ வளந்த
மனைவிக்கு ஏன் வளைந்த

காரு வேணாம் ரசிக்க
ஒரு வேளை சோறு வேணும் பசிக்க

பத்திரமா நீ என்ன
பட்டணந்தான் காட்டிப்போன

உன்னை பெத்தெடுத்த
இல்லமுன்னு தெரியாம
இந்தத் தத்தெடுத்த ஆத்தாவ
சேத்துவிட கூட்டிப்போன

செத்துவிடத் தோணுதய்யா
மகனே உன்னை முத்தமிடத்
தோணுதைய்யா

கடைசியா ஆசை ஒன்னு
கடவுளே
என் மகன் அனாதையின்னு
அவனுக்கு தெரியாம பாத்துக்கோ
அவன் மகன் இங்க வந்து
ஒருவேளை அவனை சேர்த்தா
கருணையோடு சேத்துக்கோ …

இது கவிதைத்துளி அல்ல
சில முதியோர்களின்
கண்ணீர்த்துளி

————————————————————————

குமார்

மழை நேரம் ஒரு மயக்கம்..

ntzef_278684

கொட்டும் மழையில்
கொதிக்கிறது உயிர்
உன்னோடு உறவாட
மேகத்திடம் தூது சொன்னேன்
உன்னை அள்ளிக் கொண்டுவர

உன் வீட்டுச் சாளரங்கள்
திறந்து வை
தென்றல் வர
தென்றலிடமும் தூது சொன்னேன் உன்னை கூட்டி வர

தூவானம் தூவினால்
நினைத்துக் கொள்
அது மேகத்தின் மொழி என்று

மொழி அறியாமல்
நீ தவித்தால்
நீ தலை அசைத்தால் போதும்
மேகத்திற்கு உன் மொழிகள்
புரிந்து விடும்

தேகம் சுடுகிறது
இதயம் பட படக்கிறது
காதலின் மேல் விழுந்து
கொஞ்சம்
காமத்தில் எழுவோம் வா

மழையோடு சேர்ந்து
மழலையாவோம்
மண்ணோடு சேரும் நீர் போல
நீயும் நானும் ஒன்றாவோம்

காதலின் மோதல் வந்து
என்னை தாக்க
விழி இரண்டும் உன்னையே நோக்க
வா காதலியே மேகத்தின்
மேலேறி
கார்மேகம் போகும் முன்னே
சீக்கிரமாய் என் வீடு வந்து சேரு

சந்திரனை தொலைத்த இரவாய்
சூரியனை தொலைத்த பகலாய்
இந்த கொட்டும் மழையில்
நீ இல்லாமல் நான் தவிக்கிறேன்
காதலியே.

காதலோடு காத்திருக்கிறேன்

————————————————————————–

ஏனோக் நெஹும்

சொல்ல மறந்த சொற்கள்…

hreyj_279361.jpg

கண்களால் கைது செய்து
காதலை புகுத்தி விட்டாய்.
பார்வையால் தவிக்கவிட்டே
என்னை தனிமையில்
ஆழ்த்திவிட்டாய்.
தோழியாய் துணைநின்றே
என் தோல்விகளை
குறைத்துவிட்டாய்.
காதலை மறைத்து நீயும்
கள்ளியாய் தள்ளி நின்றாய்.
காலமும் கொடுமை செய்தே
நம் காதலை
குதறித் தின்ன…
சொல்ல வந்த சொற்களெல்லாம்
உயிரிழந்து உனைத் தேட…
உன் உறைவிடம் தெரியாமல்
என்னுள்ளத்தில் உறைந்துபோக…
உன் நினைவுகளைப் பிரித்தெடுத்து
கனவுகளில் திரையிட்டு…
காலங்கள் கடத்துகின்றேன்
நம் காதலை வாழ வைக்க…
இந்த நொடி சொலகின்றேன்
என் காதலி நீயென்று.

இந்த செய்தி சேருமுன்னே
என்னுயிர் பிரிந்தாலும்
கல்லறையில் எழுதிவிடு…
உன் காதலன் நான் என்று…!

———————————————————

சக்திவேல் லோகநாதன்

ஆழ்ந்த உறக்கம்…

svbtl_278940

இது ஓர் ஆழ்ந்த
உறக்கம்.. தொலை தூரத்தில்.
உன் குரல்.. இமை திறக்கும் முயற்சியில் நான்!!
நீ திரும்பி வா… என்கிறாய்
ஏன் உன் குரல் விசும்புகிறது
அட! நீ கூட
அழுகிறாயா
ஏன்??

இமைகள் கனக்கின்றன..!!
என்ன இன்று
மட்டும் இப்படி உறவுகள் அழைப்பதாய் கூட
உணர்கின்றேனே
ஒரு வேளை.. நான்..!!
இல்லையில்லை

இமைதிறந்து எழுந்தேன்
அருகில் நீ..மற்றும்
என் சுற்றம்..!!
இதயம் லேசாகி பறந்தேன்
சொல்லப் போனால்
காற்றில் மிதந்தேன்..!!

அன்பே..! ! நான் எழுந்து
விட்டேன்
இது என்ன!! ஆண் பிள்ளைகள்
அழலாமா!?? நீ கூட அழுவாயா??
சரி ஏன் அழுகிறாய்? என்
ஆழ்ந்த உறக்கம் தான் கலைந்து
விட்டதே!!
என்னை கொஞ்சம் பாரேன்

திரும்பி பார்த்தேன்
உறைந்து போனேன்..!!
என்னை போல ஒர்
உருவம் அமைதியாய்
உறங்கி கொண்டிருந்தது..!!
நான் இறந்து விட்டேனா??

அந்த ஆழ்ந்த உறக்கம்
களையாததது என்
உடலுக்கு..!!
இனி இந்த களைந்த
உறக்கம்
முடியாததது
என் உயிருக்கு..!!

————————————————————

இவள் நிலா

பிழையாய் போன காட்சிகள்

 

ygpzx_277268

 

இருண்டு போகும் என தெரியாமல்
இத்தனை நாளும்
ஆசை வைத்து..
பிரிந்து போகத்தானா
உயிர் பிழைத்து வந்தேன்…..?

நம் இருவருக்குமுள்ள பந்தம்
அது அறுந்தே போனது…
உன்னோடு எல்லாம்
முடிந்தே போனது….
கணவுகளும் கருகிப் போனது….

இனி என்று என் வாழ்க்கை
வந்து சேருமோ……?
பனித்துளி போலவே
மாறி மாறி வந்து செல்லுமோ….?
மாயமாய் மறந்தேதான் போகுமோ…..?

மனச்சாட்சி இல்லாமல்
சாட்சியாய் நின்றாள்……
அவளுக்கு புரியவில்லையா…..?
நான் சுமக்கப் போகும்
வலிகளின் வலிகள்…….

ஆறாத காயங்கள் ….
தாழாத வேதனைகள்….
தந்து போனாள். .
தங்கிக் கிடக்கிறது உன் நினைவுகள்
மட்டும் எனக்குள்ளே….

நேற்றிருந்தோம் ஒன்றாய்….
இன்று எங்கோ சென்றாய்…..
என்னுள் ஒழிந்து கொண்டே..
எதிரில் மறைந்தே போனாய்….

நினைவோடு உரையாடும்
உள்ளம் தந்தாய்…..
உயிரில்லாமல் உலாவும்
உணர்வைத் தந்தாய்….
நின்ற இடம் தெரியாமல்
நீ போனாய்…….

பெண்மைக்கு பொருள் தந்தாய்..,
தாய்மை உணர வைத்தாய்….
தவிக்கிறேன் உன்னைக் காண
பாவியாக பதறுகிறேன்…
உன்னைச் சேர முடியாமல்….

தாய்.,தந்தை போலவே
தாங்கிக் கொண்ட நீ இன்று
வாழ்க்கையை விட்டே
நீங்கிப் போகிறாய்……
எப்படி இனி உன்னை
சொல்ப்படி சந்திப்பேன்
விதிப்படி சேர்வோம் என்றாயே…
இதைத்தானா….?

கண்ட கனவெல்லாம்
உன்னிடம் சொல்ல….
கை பிடித்து தலை தடவி
நனவாகும் என்று சத்தியம் செய்தாய்..,
இன்று காணாத கனவொன்றே
நனவானதே……

தன்னாலே பேசிக் கொள்கிறேன்
உன்னோடு என்றே…,
தேற்றிக் கொள்கிறேன்…
தேற்றிக் கொள்கிறேன்…..
இனி நீ இல்லை என்றே….
தேற்றிக் கொள்கிறேன்…….

என் தேகம் அது
உன் விரல் பட்ட நியாபகத்தில்
அழுது தீர்க்கிறது…..
உன்னை தேட முடிந்தும்
முடியாமல் அடங்கிக் கிடக்கிகும்
கால்கள்
என் கண்ணீருக்கு காரணம் தான்
என்றே கதறுகிறது…..

இரவு பகல் எனனை நாடிய
இதயம் ஒன்று இரும்பாய்
மாறி என் இதயத்தை உடைக்குமென
இது வரை தோனவில்லை….
இன்றும் தோன்றுகிறது
இரும்பல்ல அந்த இதயம்
அது ஒரு காலத்தில்
நானும் வாழ்ந்த இடம்…..

———————————————————–

M.F.Askiya

எங்கிருந்து தொடங்குவது

images

நான்
திசைகள் தீர்ந்து போன
தேசாந்திரி

நீயோ
கிழக்கின் ஊற்றுக்கண்
என் வாசல் வந்துன்
வானம் கொஞ்சம்
தெளித்துப் போயேன்

நீயோர்
அமுதக்கலசம்
நானோ
ஒற்றைத்துளி
பருகிச் சிலிர்க்கும்
சிற்றெறும்பு

ஒற்றை இரவுக்குள்
விண்மீன்கள் யாவற்றையும்
எண்ணிவிடத் துடிக்கும்
அறியாச் சிறுவனாய்
உன் காதலும் நானும்

நானின்றேல்
நதியில்லைஎனும்
கர்வப் பொய்மையுள் கரைந்த
கரை நான்

கடலாய் இருந்து
அலைத் தாலாட்டில்
மணல்வெளிமகவை
உறங்கச் செய்யும்
அன்னை நீ

எங்கிருந்து தொடங்குவது-
என்னை?
நீயே முடிவெடு .

——————————————————–

முத்து