இதுதான் நிஜம்.!

images

எப்பொழுதும்
என்னால் மறக்க முடியாதது
உன்னை மட்டுமல்ல
நீ தந்த வலிகளையும் தான்…

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

நான் மற(றை)க்க போராடுவது
என் காதலை மட்டுமல்ல
உன்னை நேசித்த
என் மனதையும் தான்…..

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இறிதியாய் நான் பேச ஏங்குவது
உன்னிடமல்ல
உன்னோடு முடிந்து போன
என் நினைவுகளிடம்….

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இன்று வரை நான்
வெறுத்துக் கொண்டிருப்பது
உன்னையல்ல
நீ விட்டுப் போன என்னை தான்……

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இப்பொழுதும் நீ தேடிக் கொண்டிருப்பது
என்னையல்ல..
எனக்கு பதிலாய் இன்னொன்றை…!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

M.F.Askiya

Advertisements

உனக்காகவே என் காதல்..

index

திசைகள் எத்தனை
இருந்தும் என்ன பயன் ..?
உன் தரிசனம் தரவில்லை
அத்தனையும்…
———————————————————–
திக்குத் தெரியாத இருளில்
தட்டுத் தடுமாறி நடந்தே
நாட்களை நகர்த்துகிறேன்,
சூரியன் தொலைத்த பூமியாய்..
———————————————————-
என் கன்னங்களின் வழியில்
முத்தங்கள் சேர்க்காமல்
கண்ணீரின் வழியில்
காதலை சேர்கிறாய்…
———————————————————-
அதிகம் உன்னில் அன்பு
வைத்ததனால் தானோ..,
அழ வைக்கிறாய்
என்னை தினம்…
———————————————————–
சிறகுகள் தந்தாய்…
விரித்து பறந்திடத்தானோ என
நினைத்திட்ட நேரம்
பறித்து செல்கிறாய்,..
———————————————————–
பசித்தவன் பழஞ்சோறு புசித்து
ருசி காணுவது போல்
உன் நினைவுகளின் ருசியில்
பசியாறுகிறேன்..
———————————————————-
ஓர் வார்த்தையில் எனை – வாழ
வைக்கும் வல்லமை கொண்டவள்
மௌனம் கொள்வதின்
ஞாயம் தான் என்ன?..
———————————————————-
வான்நிலவுக்கு உரிமைகோரும்
வையகத்து வரம் அது
மல்லிகைக்கு மறுக்கபடினும்
மலரத் தான் மறுக்குமா
மல்லிகை காதலும்..!
===================================================

கவிப் பிரியை – Shah

என் அன்னைக்கு..

mother-with-baby-sudhir-diwanji.jpg

“நிறைகுடம் தழும்பாது” – நிதர்சனமான
பொய்க்கூற்று, நித்திரையில் நினைவற்ற
மனிதனின் உயிரற்ற பொய்க்கூற்று…
தாயைப்பார், கூற்று பொய்யாகும்.

உலக மெய்களின் மெய்
உருவம், இவள் – உலகின்
தவம் நாம், அவள்
வடித்த மெய் உருக்கள்…

அவள் இன்பம்
அவள் துன்பம்
இரண்டும் ஒன்று
அவள் மக்கள்

முலையமுதுண்ணு கையில் முனகலிலே
மட்டற்ற மகிழ்ச்சி கொள்வாள்
தவழ்ந்து நான் நடக்கையிலே
நிழல்போல எனை தொடர்வாள்…

மழலை மொழியின் பொய்வார்த்தைகளை
ரசித்து உறக்க சிரிப்பாள்…
நான் வளர நித்தம்
அமுதூட்டி சீராட்டி வளர்த்தாள்…

நான் சிரிக்க இவள் சிரிப்பாள்!!!
நான் சிரிக்க நிதம் நினைப்பாள்!!!

அடிவயிற்றில் இயற்கை அமிலம்
சுரக்க, நானலற, துடிதுடித்திடுவாள்…
ஓராயிரம்முறை முட்டி விளையாடினும்
பொய்யாய் ஆ’வெனில் அலறிடுவாள்!

பட்டமெத்துனை பெற்றிடினும் புரம்
கூறிட, கண்களாள் எறித்திடுவாள்…
விட்டு புறம் சென்றிட
தீயில் விழுந்த புழுவாவாள்…

நான் முகம் சுழிக்க எண்ணாதவள்!!!
நான் முகம் வாட விடாதவள்!!!

தாயே, மலர்மேல் பனிபோல
எத்துனை சுகமோ உன்மடி,
மண்ணில் பட்டு சிதறிய
பனித்துளியானேன் உனை பிரிகையிலே…

கடவுள் இல்லையென நான்
இனியும் எப்படி உறைப்பேன்?
நிதம் நித்தம் கண்முன்னே
கை வீசி நடக்கையிலே…

என் உலகின் அழகிய
பெண்ணே, எனை சுமையென
நொடியேனும் என்னாத உயர்ந்தவளே!!
என் அன்னையே, சமர்ப்பணம்…

—————————————————————

நவீன் குமார் ரா

நீயெங்கே.??

tcgse_276461

எங்கு சென்றாய்?
நீ
எங்கு சென்றாய்?!…
இதயம் கிழிந்திட…
உணர்வுகள் சிதைந்திட…
காதலெனும்
நெடுவழிப்பாதையில்
நடைப்பிணமாய் என்னை
பாதியில்
விட்டபடி
எங்கு சென்றாய்?
நீயும்
எங்கு சென்றாய்?!….
கரம் கோர்த்து
நாம்நடந்த கடற்கரையும்
இமைக் கொட்டாது
கண்டு லயித்த
முகடுகளும் கிளர்த்தும்
ஆயிரம் கேள்விகளுக்கு
நானென்ன
விடைசாற்ற?!…
அமுதமென
நினைத்திங்கு
அள்ளிப்பருகியது
திராவகந்தானோ?!…
பித்தனின் மொழியென
கிறுக்கிய கோடுகளை
மோனலிசா ஓவியமாய்
விளம்பிட்ட என்
மடத்தனத்தை
என்ன சொல்ல?!
உன் விழியின்
ஒளியினில்
நடைப்பயின்ற
வாழ்க்கையின்று
அஸ்த்தமித்து கிடக்கிறது
நித்ய அமாவாசையில்…!
இரவும் பகலும்
என்னை மட்டும்
விட்டுவிட்டு ஓடியபடி
கைகொட்டி சிரிக்கிறது…
நீக்கமற நிறைந்திருக்கும்
தனிமையினூடே
கரைந்து மறைகிறது
என்
கொஞ்சலும்…
கெஞ்சலும்…!
பேசாமல் நான்
அதையே
காதலித்து
தொலைத்திருக்கலாம்…!
கனநொடி தோன்றி
மறையும்
வானவில்லாய்
வந்துப் போனவளே…!
பழுதுப்பட்ட
வாகனத்தை நம்பி
பாரசீகம் போக விரும்பிய
மூடனது கதையானது
உன்னுடனான
என் நாட்கள்…!
நிலவையும் ரசிக்க
மறுக்கிறது
உன் வதனம் கண்ட
விழிகள்!
தொடர்புள்ளியென
கரங்கோர்த்து
தொடர்ந்துவர
ஏங்கியவனின்
எதிர்காலத்தையே
வினாக்குறியாக்கி
விடைப் பெற்றாயடி
பாவி…!
காதலெனும்
போர்வைதனில்
நீ தந்த
வலிகளையெல்லாம்
வரிகளாக்கிவிட்டேன்…!
கரும்பின் சாறென
காதல்
பிசைந்து தந்த
என் கவிதைகளை
நீ
என்ன செய்தாய்?!…

————————————————————–

Daniel Naveenraj

கடந்து வந்த பாதையில்..

cqtes_191615

கடந்து வந்த பாதையில்..
நடந்து வந்த கால்தடம்..
தேடியலைய கிடைத்தது!

பள்ளிபருவத்தில்…!

நான் அதிகமாய் அமர்ந்த..
அந்த வழியில்..
கடையின் படிக்கட்டுக்கள்..!

அவ்வழியாய் கடந்த..
தேவதைகளின் வாசம்…
நினைத்து பார்க்கும் போது..வீசும்..!
நெஞ்சில் ஒரு சில நிமிட சாரலாய்…

அவளுக்கு வண்ண ஆடை மாற்றினால்..
இவளுக்கு உடம்பை குறைத்தால்..
ம்ம்ம்.. இவள் கண்ணாடி இல்லாமல்..

இப்படியான எண்ணற்ற கற்பனையில் நண்பர்களோடு நானும்..
கண்களை மூடிய மெல்லிய சிரிப்பில்…
மீண்டும் ஒரு சாரலில்…!

அதில் நனைந்தே மூடிய கண்கள்..
வகுப்பு ஆசிரியரின் பலத்த குரலுக்கு.. விழித்தெழுந்து ஓடி ஒளியசெய்தது…!

அன்று பயத்தின் கண்ணீரில்!
இன்று ஆனந்த கண்ணீரில்…

மீண்டும் கிடைக்க..
வேண்டும் மனம்…!
ஒரு குழந்தையாய் அந்த பள்ளிபருவத்தை.. தினம் தினம்…

அழகான நினைவை ஊட்டுகிறது!
என் மனதின் பசியாற்றிட…
இன்றைய பொழுதும்…!

————————————————————

sathurthi

கடைசி ஆசை!

ujbvc_227024

ஆவிகள் இருக்கலாமென
சொல்லத் தோன்றும்
என் தனிமையின் நாட்களில்,
கடந்த காலம் என்னை
தனிமையின் பிரதிநிதியாக
அறிவித்து இருக்கலாம்..!!

எனக்காக யாரும் அழாத போது
நான் அழுதிருக்கலாம்,
நிமிடங்களின் முட்கள்
நேரத்துக்கு நேரம்
என்னை மெய்ப்பித்துக் கொள்ள
நிறம் மாறியிருக்கலாம்..!!

திட மௌனமாகி
நான் இருந்த வேளை,
அப்பாலிருந்து சில
தீய சக்திகள்
துக்கம் விசாரிப்பதாக
தூண்டிச் சென்ற போது
என் உயிரை அசைத்து
உணர்வுகளை சரி பார்த்திருக்கலாம்..,!

என் வெக்கம் மானம் சூடுகளை
அக்கம் பக்கம் யாரும்
கவனிக்காத போது,
மெலிந்த என் வலிமைகளை
ஒன்று சேர்த்து
தூண்டில் புழு போல்
கரை ஏறத் துடித்திருக்கலாம் ..!!

கடந்த காலம் என்னை
வழி மறித்திருந்தாலும்,
மணலில் கட்டிய வீட்டை
இடித்து இடித்து கட்டும்
சிறுமியின் உள்ளங்கை அளவு
நம்பிக்கை எனக்குள் இருந்திருக்கலாம்..!!

கடைசி ஆசை என்னவென
யாராவது கேட்டால்
நானும் சொல்வேன்,
சிகப்பில் எல்லாம் வேண்டும்,
நிஜமாய் சிரிக்க வேண்டும்,
தனிமையை விட வேண்டும்,
நிறைவாய் உணவு வேண்டும்,
பக்குவமாய் அழ வேண்டும் ,
முடிவெடுக்க தகுதி வேண்டும்
இன்னும் இன்னும் சொல்வேன்..

நான் என்ன செய்யட்டும்..??
நம்பிக் கொடுத்தும்
திரும்ப வராத
கடன் போல
கடைசி ஆசைகளை
இறந்த காலத்திடம் கடனளித்து
தினமும் நாட்காட்டியின்
காகிதம் கிழித்து
எதிர்காலம் காத்திருக்கிறேன்…!!

——————————————————-

மனோ ரெட்

 

இரவின் மடியில்..

A_Dark_Starry_Night_Wallpaper_by_s3vendays.jpg

பூச்சிகள் இசை இசைக்க,
தெரு நாய்கள் அலற,
மிகவேகத்தில் வாகனங்கள் பறக்க…
கார்மேகங்கள் என்னை கட்டியணைக்க
நடுக்கத்துடன் தொடங்கியது
என் நள்ளிரவு..!

இதுவரை யாரிடமும்
இரவல் வாங்காத நான்..!
இரவிடம் இரவல்
கேட்டு நிற்கிறேன்..!

சற்று தாமதமாக விடி என்று..!

இரவுகளுக்கு என்னை கடன்காரனக்க
விருப்பமில்லை..!
அதனால் தான் என்னவோ..!
சீக்கிரமே விடிந்து விடுகிறது..!

விடயலை தேடி பலர் காத்திருக்க
நானோ சற்று ஓய்வெடுக்க
காத்திருக்கிறேன் இரவின் மடியில் ..!

மழலையின் சிரிப்பில் கிடைக்காத இன்பமும்,
மதுவில் கிடைக்காத போதையும்..!
என் விழியோரம் ஓடியது
தண்ணீராக..!

நான் உறங்காமல்
விழித்திருந்த இந்த இரவுகள்
இரவல் வாங்கப்பட்டவை அல்ல..!

நான் எனக்காக விழிதிறந்து
காணும் கனவுகள்..!

நான் விழித்துறங்கும் வரை..!
என் விழி திறந்திருக்கும் வரை..!

இந்த கனவு
கலையவோ
களவு போகவோ
வாய்ப்பில்லை..!

என்றும் நான்
இரவல் பிள்ளையாய்,
இரவில் மடியில்..!

———————————————————