மேலும் ஒரு கவிதை

sad love alone miss u love u quotes wallpapers (20)

உன் மெளனம்
ஆமோதிக்கிறதா
அவமதிக்கிறதா
என் காதலை?
எனக்கு இன்றளவும் விடைதெரியவில்லை;

“அலைகள்
அணைக்கிறதா
அடிக்கிறதா
அதன் கரையை?”
என்ற கேள்விக்கு விடை தெரியாததைப் போல்.

எனைக் கண்டதும்
சிரிக்கிறதா
நகைக்கிறதா
உன் இதழ்கள்?
எனக்கு இன்றளவும் விடைதெரியவில்லை;

“மழையில்
நனையுமா
நனையாதா
காற்று?”
என்ற கேள்விக்கு விடை தெரியாததைப் போல்.

நீ
சொல்வாயா
மாட்டாயா
உன் காதலை?
எனக்கு இன்றளவும் விடைதெரியவில்லை;
“வேர்கள்
திருடுகிறதா
சேமிக்கிறதா
நிலத்து நீரை?”
என்ற கேள்விக்கு விடை தெரியாததைப் போல்.

இவைகளுக்கு
விடை தெரியவில்லை எனினும்

“உனைத் தொடர்ந்து காதலிப்பதால்
எனக்கு என்ன கிடைக்கப் போகிறது?”
என்ற கேள்விக்கு மட்டும்
விடை தெரிந்து விட்டது

எனக்குக் கிடைக்கப் போவதெல்லாம்…
மேலும் ஒரு கவிதை!

———————————————————

ப்ரணா

Advertisements

ஏனடி வந்தாய் என் வாழ்வில்…

nyieo_266244

ஏனடி வந்தாய்
என் வாழ்வில்…

சருகென கிடந்த
இதயத்தை
பூக்க செய்து
உயிர் நோக
பறித்திட வந்தாயோ?…

குருடென கிடந்த
விழிகளை
வண்ணம் தீட்டி
காணும் முன்
பிடிங்கிட வந்தாயோ?…

கல்லென கிடந்த
கனவுகளை
சிலை ஆக்கி
சிதையில் தள்ளி
கொளுத்திட வந்தாயோ…

உறங்கி கிடந்த
உதிரத்தை
உணர்வு ஊட்டி
பனியில் தள்ளி
முடக்கிட வந்தாயோ?…

சவமென கிடந்த
ஜீவன் என்னை
உயிர் ஊட்டி
அப்படியே
புதைத்திட வந்தாயோ?…

வற்றி கிடந்த
நெஞ்சத்தை
செழிப்பாக்கி
அறுவடை
செய்திட வந்தாயோ?…

பேடியென கிடந்த
என்னை
வீரன் ஆக்கி
செருக்களம் தள்ளி
அழித்திட வந்தாயோ?…

கலைந்து கிடந்த
வாழ்க்கையை
தொகுத்து வைத்து
கிழித்து
எறிந்திட வந்தாயோ…

ஏனடி வந்தாய்
என சிந்தனைகள்
சிறை எடுக்க…

அவள் சொன்னாள்…..
வீழ்ந்தவனும்
சிரஞ்சீவியாவான்
உற்றவளின்
உள்ளம்
புரிந்தால்!

————————————————————————-

காதல் முடிவதில்லை

images

இன்பத்தை தேடியே அலைந்து
திரிந்த காலம் – யாவும்
ஏதோ ஓர் பிம்பத்தின் வழியே
வந்தென்ன மாயம்!

வாழ்க்கையில் தேடல்கள் வந்து
வந்து போகும் – அதை
தேடித் தேடி அலைவதிலே மனம்
தொலைந்து போக கூடும்!

தூண்டிலில் சிக்கிய மீனானதில்
என் மனது -இன்று
வானத்தை நோக்கியே விரிந்ததில்
விடிந்தது என்பொழுது!

சப்தத்தின் இரைச்சலில் வாழ்ந்து
தவித்த எண்ணம் – புவியின்
மௌனத்தில் புதைந்ததில் வாழ்வு
வசப்படுவது திண்ணம்!

சோகத்தை கடந்து மனம் வாழ்ந்து
இருந்த பொழுது – பயணத்தின்
நடுவே உன்னை கரம் பிடித்தது
என் மனது!

நீ என்னை புரிந்து கொள்ளும்
நேரங்கள் எல்லாம் – நான்
உன்னை புரிவதற்கு முயற்சித்த
காலங்கள் ஆகும்!

காலத்தின் கைகளிலே விளங்காய்
இருந்த நாம் – இன்று
காதலின் கைகளுக்கு விளக்காய்
மாறினோம் ஆம்!!

நெஞ்சின் பாரங்கள் இறக்கி
முடிக்கும் முன்னே – பல
காலங்கள் கடந்ததில் என்ன
கண்டேன் பெண்ணே??

நம் பாதையில் பயணங்கள்
முடிவதற்கு முன்னே-இன்று
ஒரு கால்தடம் அழிந்ததில் மனம்
உடைந்து நின்றேன் கண்ணே!!

நம் வாழ்க்கையில் ஆசைகள்
தீர்வதற்க்குள்ளே – நம்
வயதின் எண்கள் பெருகிநின்றது
காலத்தினுள்ளே!!

தசைகள் சுருங்கி நான்
தள்ளாடும் பொழுதில் – நீ
காலத்தை வென்று புதைந்தாய்
மண்ணில் புழுதில்!

நாம் உடலோடும் ,உயிரோடும்
பிரிந்தால் கூட – நம்
காதல் பிரபஞ்சம் முடியும்
வரை ஒயாது!!

வாழ்க்கையின் எல்லை வரை
என்னோடு கடந்திருந்தாய் – இங்கே
பாசங்கள் கண்ணீர் வலிகள் எல்லாம்
நீ தானே உணர்த்தி சென்றாய்!!!

————————————————————————————————————————