வண்ணக்கோலம்..!

wpjot_262542

தேன் சிந்தும் பூக்களை
பார்த்திருப்பீர்கள்.
நீர் சிந்தும் பூக்களை
பார்த்ததுண்டா.?
அது வாசல் தெளிக்கும்
எந்தமிழ் பெண்கள்தான்.!

கோலமிடும் பெண்களால்
வாசல் அழகாகி..
வீதி அழகாகி..
ஊரே அழகாகும்.!

வாசலுக்கும்
வாலிபத்திற்கும்
ஓரு சேர வண்ணம் பூசும்
வண்ணத்துப்பூச்சி
அவர்கள்.!

ஆணுக்குத்தெரியும்
கோலமயில் இருக்கும் வீடு
கோலங்களால் ஆனதென.!

வானம் பார்த்துக்கிடந்த
வண்ணக்கோலங்களால்
வானவில்
வளைந்துபோன காலமது.!

ஒரு முறைக்கு
ஒன்பது வெண்முத்துக்கள் சிந்தும்
மாயச்சிப்பி அவர்களது கைகள்.!

புள்ளியைச்சுற்றிய கோடுகள்
கோலங்களாகி நிற்க
கோலத்தைச்சுற்றியப்புள்ளிகள்
காதலாகி நின்றார்கள்.!

தமிழ் பெண்கள் வாசல்தான்
புண்ணியபூமி.!

கன்னிப்பெண்ணின்
கோலம் புக முடியாத
ஒரு பூவின் கோபம்
பூசணி ஆனது.!

பெண் வரையும் பூக்கோலம்தான்
பின்னாளில் பூகோளமானது.!

நட்சத்திரங்கள்
பார்க்கையில்தோனும்
வளையல் கைகளுக்கு எட்டியிருந்தால்
இந்த வானம் எவ்வளவு அழகாக
இருந்திருக்கக்கூடும் என்று.!

பூவைத்த கோலத்தோடு
கோலத்தில் பூ வைக்கும்
மார்கழிப்பெண்கள்
அதிகாலைச்சூரியனோடு
அதீத சினேகம் கொண்டவர்கள்.!

கலிலியோ
தமிழ் வீதியில் நின்று
இதைத்தான்
சொல்லி இருக்கக்கூடும்
பூமி கோலவடிவமானதென்று.!

எட்டுப்புள்ளி
ஏழுவரிசைக்கோலத்தில்
ஆறாவது புள்ளிக்கு மேல்
அழகு கூடிக்கொண்டுபோகும்
அவள் வளைவுகளில்..

இப்படி உடல்வளைத்துக்
கோலமிட்ட
என் தமிழ் பெண்கள் குறைந்து
இன்று உடல் குறைக்க
நடந்து போகிறார்கள்
தெருவெங்கும் நாய்களோடு.!

—————————————————————————–

நிலாகண்ணன்

Advertisements

எங்கே அந்த காலம்.?

50

எங்கே போனாய்
என் நெஞ்சினில்
காயதழும்பை பதித்துவிட்டு
போன இடம் சொல்
வானமானாலும் வந்துவிடுகிறேன் …………..

புத்தக பையை வீட்டில்
வைத்துவிட்டு
புழுதி காட்டில்
விளையாடிய போது
விண்ணில் பறந்த கொக்கை பார்த்து
“கொக்கை கொக்கை பூ போடு ”
கோவில் வாசல் திறந்து பூ போடு ”
என் கையை சுற்றி பூ போடு ”
ஆடி பாடி முடிந்ததும்
நககண்ணில் வெள்ளை பார்த்து பூ போட்டது
முககண்ணில் முளைத்த அந்த சில நேர சுவனம் எங்கே ?

கட்டம் கட்டி
கால் நொண்டி அடித்து
கண்மூடி பாண்டியில்
“ரைட்டா ம்ம் ரைட் ரைட்டா ம்ம் ரைட் ”
ரைட்டா ம்ம் ரைட் ரைட்டா ஏய்ய்ய்ய் ராங் ”
கைகளின் ஆடிய அந்த சங்கீத சாரல் எங்கே ?

சில மணித்துளிகள்
பாச பிரிவு கோடு போட்டு
பூபரித்த
“பூ பறிக்க வருகிறோம்”
“பூப்பறிக்க வருகிறோ ”
“எந்த பூவை பறிக்க வருகிறீகள் ”
“எந்த பூவை பறிக்க வருகிறீகள்”
“பிச்சி பூவை பறிக்க வருகிறோம் ”
“பிச்சி பூவை பறிக்க வருகிறோம் ”
“யாரை விட்டு அனுப்புகிறீர்கள் ”
“யாரை விட்டு அனுப்புகிறீர்கள் ”
“தப்ரேஜை விட்டு அனுப்புகிறோம் ”
“தப்ரேஜை விட்டு அனுப்புகிறோம் ”
எங்களுக்குள் இழுத்து ஆடிய
அந்த ஆட்டம் எங்கே ?

இருபது விரல் கோபுரம் கட்டி
ஒருவர் பின் ஒருவர் நீர் எடுத்த
“ஒரு குடம் தண்ணிஎடுத்து
ஒரு பூ பூத்திச்சாம் ”
பாச வலையின் கையில் சிக்கிய
என்னை தூக்கி போட்ட என்
நண்பர்களின் கபடமில்லா சிரிப்பு எங்கே?

பட்ட பெயர் வைத்து
கண் மூடிக்கொண்டு
பட்ட பெயர் அழைத்து
“வா வா வந்து கொட்டிவிட்டு போ”
நறுக் என கொட்டி வீட்டு
பூமியில் முத்தமிட்ட கொண்டு இருப்போம்
யார் யன்று கண்டுபிடிக்க வேண்டும்
அந்த தலை கொட்டு அப்போது
தலையில் வலி இல்லை இப்போது
நெஞ்சில் வலி போகல

அம்மா வைத்த ரசத்தில்
சும்மா பிறக்கிய
புளியங் கோட்டையில்
பல்லாங் குழி விளையாடிய
அந்த தாவணி போட்ட மங்கை எங்கே?

எழுதிய போது
விழி விட்ட நீர்
கையில் பட்டதும் தொடர முடியவில்லை.

—————————————————————————-
Muthuraja G

எழுதுகிறேன்…

262083-love

ஆழமாய் தமிழ் படித்து
ஆணித்தனமாய் சொல்லெடுத்து
எதுகை மோனை எடுத்து வைத்து
உனை அப்படியே கவரும்
ரசனைக்குரிய வைரமுத்து
நானல்ல என்று…

இருப்பினும் எழுதுகிறேன்

அளவாய் தமிழ்படித்து
உண்மையாய் உன் நினைவெடுத்து
கண்ணீர் கறையை எடுத்துவைத்து
உனை முழுவதுமாய் நேசிக்கும்
ரசனைக்குரிய வியர்வைத்துளி
நான் மட்டுமே என்று..!

இவைகளில் எதுவோ நீயே கூறடி…

images

# இறுதிவரை முயற்சித்தும்
கடந்து சென்ற காற்றை இரு
கரங்களுக்குள் சிறைபிடித்தவர்
எவருமிலர்….!!!!
————————–
#வீசும் காற்றைவிட
வேகமாக சிறகடித்து பறந்திருந்த என்னை.. நீ மட்டும் காதல் வானில்
கட்டுக்குள் கொணர்ந்த ரகசியம்
இவைகளில் எதுவோ நீயே கூறடி…!!!!
————————–
# ஈரைந்து மாதங்கள்
காத்திருந்து எனை ஈன்றெடுத்த
எனதன்னையின் பரிவு
உனது இரு விழிதனில் கண்டதாலோ ….!!!
——————————
# தலை சிறந்த சிற்பியின்
மிகச்சிறந்த சிற்பமாய்
உனை செதுக்க… பொற்சிலையாய்
நீ என் கண்முன்னே வந்ததாலோ…!
நான் கற்ச்சிலையாய்
உனதருகில் நின்றதாலோ…!!!!
—————————–
# உனது இடைதனில்
இடறி வீழ்ந்த எனது இளமையை மீட்க்க முயற்ச்சித்து.. எனது ஆண்மையும் உன் வழி சென்றதாலோ…!!!
——————————
# மிதம் மிஞ்சிய எதுவும் நஞ்சாகும்!
ஆனால் உன் இதழ் சிந்தும்
தேனமுத புன்னகை மட்டும்!!!
தெவிட்டாத பேரின்பமாய் ஆனதாலோ…!!!
——————————
# ஆயிரம் பெண்கள்
எனைச்சுற்றி வந்து
காதல் மொழியில் கதைத்தாலும் உன் ஒற்றை மௌனம் மட்டும்
எனை நிலைகுலைத்தாலோ..!!!!
————————–
#மொழிகள் சில இருந்தென்னப்பயன்….
வார்த்தைகள் பல தெரிந்தென்னப்பயன்…
உன் இரு காலடி ஓசையின்
முன்னே ஒலியிழந்து..
எனதிரு இதழ்களும் உனது பெயரை மட்டுமே உச்சரித்ததாலோ….
————————–
# மேற்ச்சொன்ன யாவும்
ஒன்று சேர.. என் மனதில்
நீ மட்டும் நிலைகொண்ட
பெண்மையாய் நிறைந்திட்டதாலோ…!!!

இவைகளில் எதுவோ நீயே கூறடி ????
———————————————————————————-

கிருத்திகா ரங்கநாதன்

காலடிக் காவியம்..!

og3123201505152106318

கரும்பலகையில் எழுத்துக்களை
நீ கவனித்து கொண்டிருக்கும்போது
உன் கருவிழி பலகையில்
காவியம் படித்துக் கொண்டிருந்தேன் நான்.

எலக்ட்ரான் நியூட்ரான் என்று
நீ ஏதேதோ எழுதிக் கொண்டிருக்கும்போது
நீதான் என் உயிர் அணுக்கள் என
ஓராயிரம் கவிதைகள் எழுதி முடித்தேன்.

இறுதியாண்டில் தேர்ச்சி பெற்று
எங்கேயோ போய் விட்டாய் நீ
பூஜ்யங்கள் வாங்கி வீழ்ச்சியுற்று
உதவாக்கரை பட்டம் வாங்கிவிட்டேன் நான்.

எழுதிய கவிதைகளையெல்லாம்
வெற்று காகிதங்கள் என கிண்டல் செய்து
எடைக்கு போட்டுவிட்டார் என் அப்பா
சுண்டல் மடிப்பதற்காவது பயன்படட்டும் என்று.

சுண்டலை சுவைத்துவிட்டு
வீசியெறியப்பட்ட என் கவிதைகளெல்லாம்
இப்போது கடற்கரை மணலெங்கும்
கதறி கண்ணீர் வடிக்கின்றன..

நீ எப்போதாவது இக் கடற்கரை வரக்கூடும்
அப்போது ஒரு கவிதையாவது
உன் காலடிபட்டு காவியமாகும்போது
வெற்று காகிதங்கள் என்று இதை
எவர் சொல்லக் கூடும்.??

———————————————————————————–

கே.எஸ்.கோனேஸ்வரன்

எனது மௌனங்கள்..!

gjsvm_261915

எனது மௌனங்களுக்கு விடுதலை
கொடுத்து அனுப்பி
இருக்கலாம் …
ஆனால்,
நான் அப்படி செய்யவில்லை ….

நீ……
என் மௌனங்களை புரிந்து
கொள்வாய் என்று தான்
அந்த வார்த்தைகளுக்கு நான் வடிவம்
கொடுக்க வில்லை ….

நமது அன்பை சின்ன சின்ன
வார்த்தைகளால் சொல்லி அதை
சிறுமைப் படுத்த விரும்பவில்லை…..
எனது மௌனங்கள்
புனிதமானவை…!!!

இரவில் தாவரங்களில் வேர்க்கும்
பனித்துளி போலவும்
மழைத்துளிகளை
சுமந்து வரும் முகில்களை
போலவும் …
உன் நினைவுகளை சுமக்கும்
எனது மௌனங்கள்
கனமானவை …….

மலருக்குள் தேனை
வைத்திருக்கும் ஒரு,
தாவரம் போல உன் நினைவுகளை
என் இருதயத்தில் மௌனங்களாக
வைத்து இருக்கிறேன் …

நீ என் மௌனங்களை விதவை ஆக்கி
விடாதே …
அவை விலை மதிப்பு
இல்லாதவை…..

உனது நினைவுகள் எனது
இருதயத்தில் நகர்வலம்
வரும்போது உன்
உணர்வு பாதங்கள் சிணுங்காமல்
இருக்க…
இருதய துடிப்பையும் இறுக
வைத்துவிட்டு
உயிர் கரங்களால் தாங்கிபிடிப்பவை
எனது மௌனங்கள் ….

நீ சன்மானம் தருவாய் என்பதற்காக
அல்ல….
சகியே !!!
நான் சமாதனம்
அடைவதற்காக…
என் மௌனங்கள் அவை
புனிதமானவை …
நீ எந்தன் நினைவிருக்கும்
வரை…….

————————————————————————————

மணிமாறன்

தேவை ஒரு காதல் கவிதை..!

cobhg_257958

உனது கிராமமும்..
எனது கிராமமும்..
துரத்த..
சென்னை வண்டி ஏறியது..
நம் காதல்.

கோவிலில்
வைத்துத்தாலிகட்டி..
வாடகை வீட்டில் குடியேறியபோது..
அந்த வீட்டில்
உன்னையும், என்னையும் தவிர..
வேறு பாத்திரங்கள் கிடையாது.!

நாம் ஓடிவந்த செய்தியில்..
ஊர் பற்றிக்கொள்ள..
உதயம் தியேட்டர் வாசலில்..
நின்றுகொண்டிருந்தோம்..
ஜில்லுனு ஒரு காதலுக்காக..!

தோட்டத்தில் ஊஞ்சல்கட்டி..
ஆடித்திரிந்த உனக்கு..
கதவே திறக்காத
சென்னைவாசிகள்..
அந்நியமானார்கள்..!

மாடியில் நின்று..
நான் மறையும்வரை..
பார்த்துவிட்டு..
தனிமைக்குள் நீ..
புதையத்துவங்குவாய்..!

அலுவலகம் நுழையும் போதே..
நான்கு சுவர்களுக்குள்..
இருக்கும் உன்னை நினைவூட்டிவிடும்..
முகப்பிலே இருக்கும் மீன்தொட்டி.!

பீச்சும் பார்க்கும் நமை..
ஏந்தி நிற்க..
ஞாயிறு தோறும்..
உன் சுடிதார் பூக்களுக்கு..
அருகிலே நான்..!

இப்படியாக கரையேறிய..
நாட்களின் ஊடே..
கருவுற்றாய் நீ.!

தேர் கொடுக்காவிடிலும்..
தேகம் கொடுத்தேன்..
கொடி நீ படர..

மார்பில் முகம் புதைத்து..
தூங்கிவிடும் உனக்கும், எனக்கும்
இடையே வயிறு இடித்தது.!

வேறுபட்ட..
இரு வர்ணங்கள் இணைந்து..
புது நிறம் தோன்றியது.!
அது இரு ஜாதியை..அழித்திருந்தது.!

——————————————————————————-

நிலாகண்ணன்

பேசாத மொழிகள்..!

yfimv_257483

மின்சார ரயிலேறிய அக்கணத்தில்
மின்னலெனத் தாக்குதல் தந்து
மின்னி மறைந்தன உன்பார்வைகள்…

காதிலொரு சாதனம்
சொருகியபடி சொற்களோடு
மல்லுக்கட்டிக்கொண்டிருந்தாய்
அப்பொழுதுகளில் …நீ

எதிர்முனையின் உரையாடல்களில்
உன் மௌனங்கள் சிலநேரம்
உடைபட்டு சிறுபுன்னகைகள்
உன்உதட்டோரம் அரும்பிநிற்க…

நெற்றிசுருளும் நீள்முடி கோதியபடி
ஓரக்கண்ணால் ஒருபார்வை வீசிவிட்டு
ஒன்றுமறியாதது போல்
தொடர்வாய் உன்பேச்சை …

ஆங்கிலம் கலந்த உன்பேச்சுக்கள்
அனிச்சையாய் என்பாதங்களை
சற்று பின்னோக்கி இழுக்க
மனம் முன்னோக்கி நகரும்…

தூரத்தில் உனை ரசித்து
துள்ளலான உன் பேச்சில்
துளிர்க்கின்ற பூவாய்
என்னுள் நான் மலர…

உன் எல்லைகளையும்
என் எல்லைகளையும்
உணரத்துவங்கிய நேரம்
படியிறங்கியிருந்தோம்… நாம்

இயல்பானதொரு பார்வையை
இதயபூர்வமாய் வீசிவிட்டு
எனைவிட்டு நீயும்
உனைவிட்டு நானும் நகர …

மறுபடி ஒருமுறை சந்திக்காவிடினும்
சிந்திப்பாய் என்றாவது
சிலநொடிகளாவது …நாம்
பேசாத மொழிகளை …!

————————————————————————————————

குமரேசன் கிருஷ்ணன்