அகப்படாத வரிகள்..!

1335317480-screenshot

மார்கழி கோலப்
புள்ளிகளுக்கிடையே…

உங்களுக்கு அகப்படாத
அவளைப் பற்றிய வரிகளை
வரைந்து கொண்டிருக்கிறேன்
இந்த அதிகாலையில்.

அந்தியில்…

அம்புக்குறி போல்
முன்னோக்கிச் செல்லும்
பறவைக் கூட்டத்தின்…

உதிரும் சிறகுகளில்
மிதந்து வருகிறது
அவளுக்கான கவிதை.

அவளின் நினைவுகள்..

வேர் கடத்தும் நீராய்
உடலெங்கும் ஊற…

ஒரு பூவின் பிறப்பாகிறது
அவளுக்கான கவிதை.

ஒரு குழந்தையின் ஸ்பரிசமாய்
காமம் தொடாத வரிகளை…

அவளுக்காக
என் சுவாசப் பைகளுக்குள்
அடைத்து இருக்கிறேன்.

முதிராது சுரக்கும்
மொழியின்…

வெட்கத்தில் துவண்டு விழும்
அவளுக்கான வார்த்தைகள்…

ஈரத் துணி சுற்றிப்
பிடிக்கப் பட்ட கோழியென
அடங்கி விடுகிறது.

பறவைக் குஞ்சாய்
கிளர்ந்தெழத் துடிக்கிறது
பிரியம்.

வண்ணங்கள் மினுங்கும்
பூக்கள்…

இதழ் குவித்து
அவளின் நினைவுகளாய்
திரும்புகின்றன
எனது நாட் குறிப்புகளுக்குள்.

கரைகிறது காலம்….

என் மௌனங்களில்
அவளுக்கான வரிகளை
எழுதிய படி.

-rameshalam

Advertisements

சில கேள்விகள்..

qkulr_256325

நீதி தேவதையே, என்னுள்…
அறியாமல்…சில கேள்விகள் !
அறியாமையால்…சில கேள்விகள் !

நிரபராதி, குற்றவாளி எனும் முத்திரைகள்…
அவரவர் செய்த செயல்களா ?
வாதாடுவோர் வாக்குத் திறமைகளா ?

உயிர் உறிஞ்சும் குற்றங்கள்….
தவறென்று தீர்ப்பான பின்னே,
சரியென்று மறுமுறை மறு தீர்ப்பாகுமா ?

செய்யாத குற்றத்தில் சின்னா பின்னமாகும்…
அப்பாவிகள் இழந்த வாழ்வும், நேரமும்…
எந்த சட்டமும் மீட்டுத் தருமா ?

உன் கண்ணில் துணிக்கட்டு….
நீதி பாரபட்சம் பார்க்காதது என்பதாலா ?
நிரபராதி படும்பாடு பார்க்கச் சகிக்காததாலா ?

கட்டுகளை கழட்டி எறிந்து…
குற்றங்களை வேரறுக்க நீயே…
நேரில் வாளெடுத்து வரக்கூடாதா ?

கடைசியாக ஒரு கேள்வி !
கண்கள் அறியா கடவுளுக்கு கண்களில்லையா !!
கலிகாலத்தில் கடவுள் சக்தி எடுபடாதா ?

அமுதா

இவர்களுக்காய் அவர்கள்..

independence-day-special-top-15-patriotic-movies-of-bollywood-mother-india

அதிகளவு எதிர்பார்ப்புக்கும்
சிறிதளவு முயற்சிக்கும்
இடையில்
அலைந்து கொண்டிருக்கிறது
இவர்கள் காலம்.
சமையல் அறையில்
இடையுறாது
ஒலிக்கும்
தொலைபேசிச்
சிணுங்கல்களை
காஞ்சி புரங்கள்
கைவளையல்கள்
கைக்கடிகாரங்கள்
சின்னத்திரைத்
தொடர்கள்
பாகுபலிகள்
முகப் பூச்சுக்கள்
நகச்சாயங்கள்
நிறைத்துக் கொள்வதால்
அடுப்பில்
அரைகுறையாக
கொதித்துக்
கொண்டிருக்கும்
குழம்புகள்
உவர்ப்பா புளிப்பா
எனத் தெரியாது
உருக்குலைந்து
போகின்றன..
எல்லாம் ஓய்ந்த
அந்த நாளின் முடிவில்
இருளின்
முதுகுத் தண்டு கிழித்து
இறுதியாக
வரும் பேரூந்தில்
இரண்டாவது ஷிப்ட்
முடித்து
இறங்கி வந்து கதவு தட்டும்
இவர்கள் கணவர்கள்
கைப்பையில்
ஏதோ கனவுகளுடன்
காத்திருக்கும் வங்கி அட்டை
இறுதி மூச்சு விட தயாராகிறது
நாளை இவர்களுக்காக ….

-உமை

விட்டுப் பிரிந்த காதல்

rboqh_254705

இதயம் கூட சுமையாகிறது…
சுமக்கும் போது
நினைவுகளும் கனமாகிறது….
உயிரே உன் பிரிவு என்னைக் கொல்கிறது…
என் விழிகள் உன்னை தேடுகிறது,..
என் வழிகளிலும் வலிகள் நிறைகிறது…
என்ன சொல்ல என் இதயத்திற்கு
எங்க நீ போனதா நான் சொல்ல..?

களையாத நினைவுகள் தந்தாய்,
களையும் கணவை
கண்ணோடுதான் வீசினாய்,
அன்பில் என்னை அரவனைத்தாய்,
அடுத்த நொடி அழ வைத்தாய்,
காதல் காதல் என்று
கதை பேசி கணவிலே கோட்டை
கட்டி வாழ விட்டாய்,
அத்தனையும் இடிந்து போக
இத்தனையும் தாங்கும் இதயம்
எப்படி மறக்கும் உன்னை..?

உறவுகள் இருக்க
உனக்காக மட்டும் வாழ்ந்து,
உன்னைப் பார்க்க பகலிரவாய்
காத்திருந்து,
உன்னோடு பேச மனிக்கணக்காய்
துடித்திருப்பேன்…
மண்டியிட்டு கேட்டேன்
என்னை விட்டு விடாதே என்று,
எப்படி புரிய வைப்பேன்
நீ என்னை விட்டுச் சென்றதை,

ரனப்பட்ட இதயத்தை
நொறுக்கி விட்டு,
காதலைக் கொன்று ,
கண்ணீரை தந்து போகும்
என் இமையே….!
அனையா தீக்கு
என்னை அள்ளிக் கொடுத்தாய்
அர்பனமாய்,
வருசங்களானாலும் வாழ்வேன்
உனக்காக.,
என்னோடு நீ சேரவே
யுகங்கள் காத்துக் கிடப்பேன்
என் காதலோடு…