அன்பு தோழி சத்யாவிற்கு..

chvaq_238959

அன்பு தோழிக்காக ….

என் அன்பு தோழியவள் …

அம்மயிலின் அழகு
முகம் இன்னும் கண்டதில்லை …

அக்குயிலின் குரலிசை
மட்டும் கேட்டுள்ளேன் ….

முகவரி மட்டும் இருவருக்கும்
எழுத்து தளமே …

அன்பினை நட்பெனும்
சாரல் மழையில்
தூது விடுகிறாள்….

கண்கலங்கும் நேரங்களில்
மயில் இறகாய் வருடி
விடுகிறாள் ஆறுதலான
வார்த்தைகளில் …

பெயருக்கு பழகி
செல்லும் உறவுகளுக்குமுன்
நட்பெனும் உறவுக்காக
பழகும் பதுமையவள் ….

தாயாக தோள்
கொடுப்பவள் என்
இன்ப துன்பங்களை புதைக்க …

மணவாழ்க்கை இனிதே
அமைய வேண்டுகிறேன் என்
அன்புத் தோழியவளுக்கு ….

நல்வண்ணமாய் நல்லறம்
அமைய வாழ்த்துகிறேன் ….

மணமாலை அவள் சூட
பெண்தோழியாய் அவளருகில்
நான் வேண்டும்…..

இன்றல்ல என்றுமே
நம் நட்பு தொடரும் வரம்
வேண்டுமடி தோழி….

(என் அன்புத்தோழி சத்யாவிற்கு சமர்ப்பணம்….)

Advertisements

உதிர்ந்து போன உயிரற்ற காதல்.!

gfloc_239212

நீ விரும்பும்
நந்தவனமும் நதிக்கரையும்
நஞ்சையும் புஞ்சையும்
என் வசம் இல்லை .

பட்டத்து யானையும் பரிவாரமும் பொன் கட்டிலும் பூ மெத்தையும்
என் சொந்தமாய் இல்லை .

அடுக்கு மாடிகளும்
அதி சொகுசு வாகனமும்
ஆணையிட அடிமைகளும்
அள்ளி வீச வைரங்களும்
எனக்கானதாய் இல்லை .

கொஞ்சிடும் குரலும்
கோவைப்பழ இதழும்
சிவந்த முகமும்
கவர்ந்திடும் விழிகளும் என்னிடம்
இல்லவே இல்லை .

என்னிடம் இருப்பதெல்லாம்

தாலாட்டே கேட்காத செவிகளும்
கண்ணீரில் குளிக்கின்ற விழிகளும்
அன்பிற்காய் ஏங்கும் இதயமும்
தனிமைப் படுத்தப் பட்ட உள்ளமும் தான் .

உன் மௌனத்தின் பாஷைகள்
புரிகின்றது உயிரே
கடதாசி பூவிற்கு ஏன்
கடவுளின் தரிசனம் என்று .?

அதுவும் மலர் தானே உயிரே .!

அறிந்துகொள் அன்பே .!
என்காதல்
இன்று
ஏழையாகி போகலாம்
விழிநீர் மழையாகி
கடலோடும் கலக்கலாம் .

நாளை

நீ ரசித்து சுவைத்த
விரும்பி அணைத்த
அனைத்துமே உன்னை வந்து சேரலாம்
நீ நேசிக்காத என்னையும்
நிஜமான என் காதலையும் தவிர.!!

-முத்து