என்னை கொன்றுவிட்டு சென்றவளே.!

ibkmp_201104

உயிரானவளே…

எனகென ஓர் உலகம் அது
நீதான் என்று இருந்தேன்…

நீயோ உன் பெற்றோர் சொன்ன
உலகமே பெரிதென்றாய்…

என்னையும் என் காதலையும்
உதறிவிட்டு சென்றுவிட்டாய்…

இல்லையடி என்னை
கொன்று சென்றுவிட்டாய்…

என் வாழ்வில் வந்த
இன்பமும் நீதான்…

துன்பமும் நீதான்…

எளிதாக என்னை
மறந்துவிட்டாய்…

எளிதாக உன் மனதிலிருந்தும்
என்னை மறைத்துவிட்டாய்…

என்னால் முடியவில்லையடி
உன்னை போல்…

உன் நினைவுகள்
ஒவ்வொன்றும்…

என்னில் மாறாத
காயங்களை ஏற்படுதுத்தடி…

உனக்கு இது
சாதரணமாக இருக்கலாம்…

எனக்கோ என் வாழ்வில்
என்றும் மறையாத…

வடுக்களாய் மாறிவிட்டதடி…

என்றும் உன் வாழ்வு
சிறக்க என் ஆசிகள்…..

Advertisements

பிடிக்கவில்லை என்றாவது சொல்.!

bzsxf_201118

அழகே…

நான் கொடுக்கும் மலரை
நீ காலில் மிதிப்பாய்…
முட்கள் இல்லாத
ரோஜா வாங்கிவந்தேன்…

நான் கொடுக்கும்
காதல் கடிதத்தை…
நீ கிழித்தெறிவாய்…
அதற்காக மெல்லிய
காகிதம் கொண்டுவந்தேன்…

பரிசு பொருள் தந்தாள்
தூக்கி எறிவாய்…
கணம் இல்லாமல்
வாங்கிவந்தேன்…

ஒர கண்ணால் பார்ப்பாய்
இருவிழிகள் வாங்கிவந்தேன்…

உன் புன்னகையால்
என்னை கொள்வாய்…
அதற்காக உயிரோடு
வந்தேன்…

எல்லாம் தெரிந்தும்
தெரியாதவளாய்…
புரிந்தும் புரியாதவளாய்
என்னை கொள்வதேன்…

உன்னை நினைக்க
வைத்து…
என்னை நினைவிழக்க செய்யும்
தனிமையை நான் வெறுக்கிறேன்…

குருதி சிந்தாமல்
ஆயுதங்கள் இல்லாமல்
யுத்தம் செய்யாமல் என்னை
துடிக்க துடிக்க கொள்ளும்
உன் மௌனம்
வேண்டாமடி…

வலிதாங்க முடியவில்லை
என்னால்…
இதழ் பிரித்து காதல்
மொழி பேசிவிடு…

பிடிக்கவில்லை என்றாவது…..