இலக்கணப்பிழை.!

Image

ஒரு
கவிதையின் இலக்கணத்தோடு
உன் அழகைப்பற்றி
எழுத முனைந்தேன் !

உன்
அழகின் இலக்கணத்தோடு
கவிதை தன்னை
எழுதிக்கொண்டது !

=====================================

நீ
இல்லத்தரசி
ஆகும் முன்பு
என்
இதயத்தரசி
ஆகிவிடேன் !

=====================================

உன்னைப்
பொருத்தவரை
உன் நிறம்
மாநிறம் !
என்னைப்
பொருத்தவரை
உன் நிறம்
மாஆ நிறம் !

=====================================

நாம்
பார்த்துக் கொள்ளும்
போதெல்லாம்
இமைகளால்
படபடக்கிறாய்
நீ !
இதயத்தால்
படபடக்கிறேன்
நான் !

=====================================

வார்த்தை என்ற
வாகனம்
என் வாய்க்குள்ளேயே
பம்மிக்கொண்டிருக்கிறது
உன் கண்கள் எனும்
செக் போஸ்ட் கண்டு !

=====================================

என்
நகைச்சுவை என்ற
பட்டாசுகளுக்கு
உன் சிரிப்புதான்
தீபாவளி !

=====================================

உன்
கண்களில்தான்
கண்டெடுத்தேன்
எனக்கான
இறக்கைகளை !

=====================================

உன் முகம்
என்ற உலகத்தில்,

புன்னகை என்பது
அதிகாலை !

சிரிப்பு என்பது
முற்பகல் !

முறைப்பு என்பது
உச்சிப்பொழுது !

மௌனம் என்பது
அந்தி !

சோகம் என்பது
இரவு !

இப்போது
அந்த உலகத்தில்
அதிகாலை என்று
நினைக்கிறேன் !

=====================================

உன் கண்கள்
கேட்கும்
அத்தனை கேள்விகளுக்கும்
என்னிடம்
ஒரேயொரு
விடைதானிருக்கிறது !

=====================================

உன்னைப்பற்றி
நானெழுதிய
எப்பேர்பட்ட கவிதைகளையும்
ஒரே புன்னகையில்
வீழ்த்தி விடுகிறாய்
நீ !

=====================================

அழகைக்கெடுப்பது தான்
ஒரு தெற்றுப்பல்லின்
இலக்கணம் என்றால்
உன்னைப் பொருத்தவரை
அது
இலக்கணப்பிழை !

Advertisements

வினாவுடன் நான் விடையின்றி நீ.!

Image

உனக்கான எனது வானிலை
எப்போதுமே மேகமூட்டமாக இருந்தாலும்
எனக்கான உனது வானிலை
அடிக்கடி கடும் வெயில் அடிப்பதாகவே இருக்கிறது..

அதனை குறைக்க நான்
தென்மேற்கு பருவக்காற்றிடம் முறையிடவோ
இல்லை
வடகிழக்கு பருவக்காற்றிடம் முறையிடவோ..

எனது முறையிடலுக்குப்பின்
வானிலையில் மாற்றம் வருமோ
இல்லை
அதுவும் ஏமாற்றம் தருமோ

நாளைய வானிலை அறிக்கை பற்றி
தொலைக்காட்சி செய்திகளில் தெரிந்துகொள்ளலாம்
எனக்கான உனது வானிலையை
நான் எங்கே தெரிந்து கொள்வேன்
எப்படி தெரிந்து கொள்வேன்

எப்போதும் போல‌
வினாவுடனே நான்
எப்போதும் போல‌
விடையின்றியே நீ….!

இழப்பில்லை.!

Image

நீ சிரிக்க அவளும்
சிரிப்பாள்
நீ அழ அவளும்
அழுவாள்
உனக்கேதும் நேர்ந்தால்
உணவருந்த மறப்பாள்
உள்ளந்தனில் துடிப்பாள்
அவள்தானே அன்னை

தனக்கென ஏதும்
விரும்பாமல்
உனக்கென வாழ்வான்
தன் கனவுகளுக்கு
உயிர் கொடுத்து
உன் உருவம்
அதில் கான்பான்
ஈடில்லா தந்தை

எத்தனை வேண்டுதல்
எவ்வளவு கண்ணீர்
நிகரில்லா அன்பு
இவையாவும்
ஒருபுறமிருக்க

வயதினால் வந்த
மாற்றத்தில்
வருடங்களாய் பழகிய
நெஞ்சங்களை விட்டு
உயிரை மாய்பாயோ
வெற்று காதலுக்கு

அன்னையின் அன்பறியா நீ
தந்தையின் தியாகமறியா நீ
இருந்தென்ன லாபம்
இறந்து போ
இழப்பில்லை உலகுக்கு !

எங்கே தொடங்குவது..!?

Image

 

எங்கே தொடங்குவது
நம் காதலின் முடிவை…
இன்னதென்று புரியா தருணத்தில்
புதைந்த எண்ணங்களுக்கு,,,
ஒருநாள்
உயிர் கொடுத்து
உணர்வுகளையும் கொடுத்தாய்….

என் தனிமையை
என் இதயத்தை
என் காயங்களை என
என்னையே களவாடிச் சென்றாய்
களவுபோவதை உணர்ந்தும்
ரசித்தேன் வேறேதும் செய்யாமல்…

உன்னுள் தொலைந்தேன்
உன்னையே எண்ணி
உருகும் மெழுகானேன்
என் வாழ்நாளின்
ஒவ்வொரு நொடியையும்
உன்னுடன்
உன் கைகளுக்குள்
கழிக்க எண்ணினேன்…

ஆனால் இன்றோ…
உன்னை வெறுக்க
காரணம்தேடி அலைகிறேன்
மிஞ்சியது ஏமாற்றமே…

உன்னை வெறுக்க
காரணம்தேடி அலையும்
என் சுயகௌரவம்
காரணங்களை கண்டுபிடித்தாலும்
உன்னிடம் காதலை
மட்டுமே கொடுக்க நினைக்கும்
மனது வெறுப்பை எல்லாம்
என்மீதே ஊற்றி செல்கிறது…

உதடுகள் உன்னை
வெறுக்கவேண்டி புலம்பினாலும்…
ஆழ்மனம் மட்டும் என்னை
தோற்க்கும்படி மன்றாடுகிறது…

எந்த நோடியில்
உன்னை காதலித்தேன் என்று
ஆராய்ந்து அறிவதற்க்கு முன்…
எந்த நொடியிலாவது
உன்னை மறக்கமுடியுமா என்று
ஏங்க வைத்து விட்டாயே…

நட்பு வனம் நீ..!

எனக்கு நட்பு நடத்திய
நட்பு வனம் நீ
எனக்கு நண்பனாய் வந்து
தாயுமானவனே
தந்தை போல் நின்றவனே
பிள்ளை போல் சுமந்தவனே
உனக்குள் கருவறை இருந்திருந்தால்
மீண்டும் உயிர் கொண்டிருப்பேன் அதில்..

என் கைக்குள் அடங்கிய
நட்பு வானமே…!
உன் தோள்களுக்குள் தொலையும் வரை
புரியவில்லை எனக்கு தோழமையின் வலிமை…
வாழ்வை நட்புமயமாக்கினாய்
நந்தவனமாக்கினாய்
உனக்கு சொந்தமானவனாக்கினாய்

எந்தன் மானம்
உந்தன் மானம் என்றாக்கினாய்
உந்தன் மனம்
எந்தன் மனம் என்று உணர்த்தினாய்
புது உலகம் என் வசம் ஆக்கினாய்

போதும் என்று உன்னிடம்
ஏதும் தோன்றவில்லை எனக்கு
மீண்டும் மீண்டும் உன் நட்புக்குள்ளே
உயிர் கொள்ளத் துடிக்கிறது மனது
இந்தியப் பெருங்கடல் கடந்து
எனக்கோர் இன்னொரு
இதயம் கண்டெடுத்திருக்கிறேன் நான் …!

அவள் தான் அம்மா..!

Image

உயிர் கொடுத்து

உருவம் கொடுத்து

ஊணும் கொடுத்து

தன் உடம்பில்
இடமும் கொடுத்து

பூமித்தாய் கேட்டதினால்
தத்தும் கொடுத்து

உனக்கு உணவாக
தாய்பாலும் கொடுத்து

அழுகின்ற பொழுதெல்லாம்
தாலாட்டுப் பாடல் கொடுத்து

சிரிக்கின்ற பொழுது
திருஷ்டிப் பொட்டும் கொடுத்து

படிப்படியாக வளரும் பொழுது
ஆனந்தத்தைக் கொடுத்து

பருவம் அடையும் பொழுது
அரவணைப்பையும் கொடுத்து

மனம் தடுமாறும் பொழுது
ஆதரவும் கொடுத்து

திருமண பந்தத்தில்
உன்னை விட்டும் கொடுத்து

தாம்பத்திய வாழ்க்கையில்
குறுக்கிடாமல் உன் மகிழ்ச்சியை
உனக்கே கொடுத்து

இவ்வளவும் கொடுத்தவள்

தன் வயோதிகத்தில்
உன்னிடம் வந்து எதையும்
கொடு என்று ஒருபோதும்
கேட்டதில்லை.

அவள் தான் “அம்மா”

பொய்யுரைத்தேன்..!

Image

பொய்யுரைத்தேன் நான்
உன்னை விரும்பவில்லை என்றே

நம்பிவிட்டால் நீ அதனை
அழுதிடுவேன் மனம் உடைந்தே

பெண்மைக்கு எளிதில் ஒப்புக்கொள்ள
முடியாதே தன் காதலையே, காதலனிடம்

நாணம் கொஞ்சம் அதிகம், கூச்சம்
கொஞ்சம் காரணம்

மறுபடியும் கேட்டு நீ நின்றிருந்தால்
என் முன்னே, சொல்லிடுவேன் நான் உண்மை

உயிருக்கு நெருக்கமான உன் உறவு
காலமெல்லாம் வேண்டும் இது என் கனவு

கண் கொண்டு நீ வேறொருத்தியை பார்த்து
விட்டால், விட்டுடுவேன் என் உயிரை

கனிவோடு சொல்கின்றேன், என் நிலைமை
காத்திருக்கின்றேன், எதிர்ப்பார்த்திருக்கின்றேன்
அனுதினமும் உன் வரவை

கேட்டிடு நீ மறுபடியும், சொல்லிடுவேன் நான்
அதனை, கூச்சம் விட்டு, நாணம் தொலைத்து

நான் உன்னை விரும்புகிறேன் காதலனே…!

சிரித்து சிரித்து என்னை..!

Image

எங்கே சென்றாய் நீ – என்னை
ஏங்க விட்டு எங்கே சென்றாய் நீ..?
எங்கோ பறந்து விட்டாய் நீ – என்னை
ஏங்க வைத்து மறைந்து விட்டாய்..!

இதழ் விரித்து மலராக சிரித்தாய் – நீ
இதயத்தில் தேன் கொண்டு நிறைத்தாய்.!
உன் விழிபார்வை அம்பாலே இழுத்தாய்
என் விழிதேடும் நிழலாகி குதித்தாய்..!

உன் சிரிப்பு கண்டு இமயத்தில் பறந்தேன்
உன் குழிவு கண்டு இதயத்தை மறந்தேன்..!
உன் நாணத்தில் நானென்னை இழந்தேன்
உன் குரலாலே மீண்டும் நான் பிறந்தேன்..!

நினைவாலே என் உதிரமும் தேட்டம்
நிழல் காண அது வேகமாய் ஓட்டம்.!
காலோசை செவி கேட்க நோட்டம்
கண்டாலோ என்னிதயம் மலர் தோட்டம்..!

எண்ணத்தில் நீந்துகிறேன் உனை மனதில்
வண்ணத்தில் வருவாயோ என் கனவில்..!
சிறைபட்ட என் காதலை நீ கேளு
சிரிக்காமல் ஒரு பதிலை நீ கூறு..!

பித்தனாய் பிறக்க வில்லை பெண்ணே
புத்தனாய் மாற்றி விடாதே கண்ணே..!
சித்தனாய் வலம் வரும் முன்னே
சுத்தனாய் என்கை பிடிப்பாய் பொன்னே..!