காதலில் மட்டும்தான்.!

Image

எதிர்பார்ப்பு இல்லாததே

காதல் என்றாலும்

எதிர்பார்கிறேன்

உன்னிடம் காதலை…

இல்லை என்றால்
வேண்டும் என்பதும்

கிடைக்கும் என்றால்
வேண்டாம் என்பதும்

உரிமை கொண்டால்
உதறி தள்ளுவதும்

உதறி விட்டால்
ஓடி வருவதும்

காதலில் மட்டும்தான்………

 

 

Advertisements

சொல்லாமல் விட்டு செல்.!

Image

சில நேரங்களில்…
சில மனிதர்கள்.
சிலர் புன்னகைப்பர்…
சிலர் முறைப்பார்…
சிலர் பரிகாசம் செய்வார்…
சிலர் பாசமழை பொழிவர்…
சிலர் நடிப்பார்…
சிலர் வஞ்சி புகழ்வார்…
சிலர் மௌனமாய் பிரிவர்…
நாம் என்ன செய்கிறோம்?
அன்பாய்…
பாசமாய்…
நேசமாய்…
நட்பாய்…
பேசி பழகி,
மக்களோடு மகிழ்ந்திருந்தால்…
ஏன் கோபம்?
ஏது வெறுப்பு?
எதற்கு சண்டை?
ஏனிந்த பிரிவு?
குற்றங்களை கண்டு,
சுட்டி காட்டும் முன்…
சிந்தித்து செயல்படு!
வாய்பேசி வென்றாலும்,
வழக்கென்னவோ நடுத்தெருவில்தான்!
பட்டம் பெற்றவன்,பண்புள்ளவன்…என்று
பரிந்துரைத்தாலும்…பலனில்லை!
விட்டு கொடுத்து…விலகிச் செல்!
வாய்ப்பேச்சு,
வருத்தத்தை வரவழைக்குமென்றால்…
சொல்லாமல்…விட்டுச்செல்!
சொந்தங்கள் பிழைத்து போகட்டும்!
சொல்லிவிட்ட வார்த்தைகள்,
உன்னை கொல்லும்…
சொல்லாத வார்த்தைகள்,
உன்னுள் வெல்லும்!
சொல்லாமல் …விட்டுச் செல்!

கவிதை எழுதிய கவிதை.!

Image

கணத்த மனதோடு
கவிதை எழுத
தொடங்கினேன் …

எதையோ எழுத
எத்தனித்த கை
எழுதியது காதலை ..

ஆரம்பித்தவுடன் பொங்கியது
கவிதை உள்ளமும்
கண்ணீர் வெள்ளமும்…

கரைப்புரண்ட கண்ணீரை
கைக்குட்டையில் ஒளித்து
கவிதையை காகிதத்தில்
எழுதினேன் ..

முதலுரையாய் ….
நெஞ்சம் அசைப்போட்டது
காதலித்த நிமிடத்தையும்
காதலிக்கப்பட்ட நொடியையும் …

மறைந்த நினைவுகள்
மறுப்பிறவி பெற்றது
மைப்பேனாவால்…….

கணினி மூளையை விட
மிக விரைவாய்
காற்றில் பறந்த காலத்தையும்
காயம் பட்ட காரணத்தையும்
வரிசைப்படுத்தியது …
மனித மூளை …..

காட்டிய பாசமும்
காட்டப்பட்ட நேசமும்
கரையான் அரிப்பாய்
காதலை தின்ற
காயமும் கவிதைக்கு
கருவாக்கப்பட்டது ….

கருப்பொருள் கிடைத்தவுடன்
உட்பொருளாய் கிடைத்தது
உல்லாசமாய் உலா வந்த தருணமும்
உணர்ச்சியை தூண்டிய உரசல்களும்
உணர்வைத் சுட்ட சொற்களும்
உறைந்து போன ரணங்களும் ……

முடிவுரையாய்
ஆயுளுக்கே ஆதாரமான
காதல் காகிதத்தில்
கையடக்கப்பட்டது ………

காதல் கடிதங்கள்
எழுதிய கை
கண்ணீர் கவிதை
எழுதியதை எண்ணும்போதே
எதிரே நின்றது
காதலியின் உருவம் …

உறவே நீதான் என்று
சொன்ன உருவம்
இன்று
புகைப்படத்திலும்
மனத்திரையிலும்
ஒளிர்ந்தது …..

எழுதுகோலில் மை
குறைந்தது போல
கவிதை படைப்பால்
பாரம் குறைந்தது ………..

ஏனோ தெரியவில்லை
காயங்களை மறக்க
காதலியை விட
கவிதைகள் கைகொடுத்தது …………!!!!!!!!!!!!!

அவளைக் காணவில்லை.!

Image

செல்லும் பயணம் முழுதும்
செல்லரித்த அவளின்
செல்லமான நினைவுகள்,
பயணம் முடியும் முன்பே
அவளை காணவில்லை..!

அவளுடன் வரும்போது
நிழலை நான் மதிக்கவில்லை,
நிழல் என்னை பழி தீர்க்க
நிமிர்ந்து இப்போது சிரிக்கிறது
அவளைக் காணவில்லை…!!

மணிக்கொரு முறை அல்ல
மணித்துளிக்கு ஒருமுறை
உப்புக் கண்ணீரை
உதிர்த்து நிற்கிறேன்
அவளைக் காணவில்லை.!!

கடந்த காலத்தின்
தோல் உரித்து நிற்க
பாம்பு அல்ல என் மனம்,
நினைவில் விசமேற்றிய
அவளைக் காணவில்லை…!!

சூடு சொரணை அற்ற
மானம் கெட்ட மனசு,
பிடித்த பாடல்களுடன்
அவள் குரலும் கேட்கிறது,
அவளைக் காணவில்லை…!!

அவளைக் காணவில்லை
அவளின் பிரிவும் உண்மைதான்
அதற்காக அழுகையை
ஒரு வாரத்திற்கு மேல்
நீட்டிக்க முடியாது…!!

அதற்கும் மேல்
எனக்கும் நடிக்க தெரியாது..!!

இத்தனையும் வந்தது காதலால்.!

Image

எத்தனை வேகமாய் போகிறது என் மனம்…

நீ போ போ என்று
துரத்தும் போதெல்லாம்
போகிறது என் மனம்

உன்னையே தேடி!
……………………………

இத்தனை வெறுப்பு தான் எதற்கு?

நீ பிடிக்கவில்லை என்று
வெறுக்கும் போதெல்லாம்
என்னையே பிடிக்காமல் போனது எனக்கு

உனக்கு பிடிக்காதது எனக்கும் பிடிக்காது என்பதால்!
……………………………

என்ன கோவம் கொண்டேன் என் மேல்?

நீ கோவப்பட்டு
திட்டிச் சென்ற போதெல்லாம்
எனக்கு கோவம் வந்தது என் மேல் தான்

ஏன் உன்னை கோவம் கொள்ள வைத்தேன் என்று!
……………………………

எப்படி பிரிந்தது என் உயிர்?

நீ விலகி போ என்று
சொன்ன போதெல்லாம்
விலகி போனது என் உயிர்

என்னை விட்டு!
……………………………

இத்தனையும் எனக்குள் வந்தது ஏன்?

எனக்கு உன் மேல் வந்த காதலால்…!
…………………………………………………………..

முதல் தோழி அம்மா.!

Image

மரமேறி கால் ஒடித்து
ரத்தம் ஒழுகி வர…..

விளையாட்டு போதையில்
படிப்பு மட்டு பட்டு விட

வளர்ந்தபின் உழைப்பிலாமல்
ஊர் சுற்ற

தந்தை
அடிக்க வரும் போதெல்லாம்

திட்ட வரும் போதெல்லாம்

குறுக்கே விழுந்து
சில சமயங்களில் அடியையும்
பலசமயங்களில் வசவுகளையும்
சிரமேற்றி தான் வாங்கிக் கொண்டு

கோபம் முறைக்கும் என்னையும்
தலை கோதி சமாதாணப்படுத்தி

இணையா தளவாடங்களான
எங்களை
இணைக்கும் நடு பாலமாய் இருந்து

தன்னுயிர் காக்கிறாள்

தடுக்கி விழுந்த போது
அவளை நான் அழைக்கிறேன்

ஒரு கணம் ..கருப்பை துடித்து சுருங்க
என்னை அவள் நினைக்கிறாள்

பசித்த கண்கள் பார்த்து அமுதூட்டி

நெற்றி முத்தமிட்டு..நெஞ்சோடு அணைத்து
என்னை உற்சாகப்படுத்தி

தவறுகளோடு என்னை
எவரிடத்திலும் எப்போதும்
விட்டுக் கொடுக்காமல்
தட்டிக் கொடுத்து…..

மீசை முளைத்தாலும்
நரைத்தாலும்

இடுப்பு விட்டு இறக்காமல்
இறுதிவரை..பிள்ளையெனவே
எனை சுமக்கும்…தெய்வநேசம்

எல்லாஆண்மகனிலும் முதல் தோழி…

–அம்மா–

ஆயிரம் தான் கவி சொன்னேன்.!

ஆயிரம் தான் கவி சொன்னேன் ….
அழகா அழகா பொய் சொன்னேன்….
பெத்தவளே உன் பெருமை
ஒத்தவரி சொல்லலியே ….
காத்து எல்லாம் மகன் பாட்டு….
காயிதத்தில் அவன் எழுத்து….
ஊர் எல்லாம் மகன் பேச்சு….
உன்கீர்த்தி எழுதலியே….
எழுதவோ படிக்கவோ இயலாத
தாய் பத்தி
எழுதி என்ன லாபம்ன்னு
எழுதாம போனேனோ….
பொன்னையாதேவன் பெத்த பொன்னே
குல மகளே….
என்னை புறம் தள்ள இடுப்பு வலி
பொறுத்தவளே….
முத்து(ராஜா) பிறபான்னு
வயித்தில் நீ சுமந்தது இல்ல….
வயித்தில் நீ சுமந்த ஒன்னு
முத்து(ராஜா) ஆயிருச்சு.
கண்ணு காது மூக்கோட கருப்பாய்
ஒரு பிண்டம்….
இடப்பக்கம் கெடகையில என்ன
என்ன நெனச்சிருப்ப….
கத்தி எடுப்பவனோ …களவான
பிறந்தவனோ….
தரணி ஆழ வந்திருக்கும்
தாசில்தார் இவன் தானோ….
இந்த விவரங்கள் ஏது ஒன்னும்
தெரியாம….
நெஞ்சு ஊட்டி வளத்த உன்ன
நெனச்சா அழுக வரும்….
கத கதனு களி கிண்டி….
களிக்குள்ள குழி வெட்டி….
கருப்பட்டி நல்லெண்ண கலந்து
தருவாயே….
தொண்ட இல இறங்கும்
சுகமான இளம் சூடு….
மண்டையில இன்னும் மச மசன்னு
நிக்குது அம்மா….
கொத்த மல்லி வறுத்து வச்சு….
குறு மொளகாய் ரெண்டு வச்சு….
சீரகமும் சிறுமிளகும்
சேர்த்துவச்சு வச்சு நீர்
தெளிச்சு ….
கும்மி அரைச்சு…நீ கொழ
கொழன்னு வழிகைல…அம்மி
மணக்கும்… அடுத்த தெரு
மணமணக்கும்……..
தித்திக்க சமைச்சாலும்….
திட்டிகிட்டே சமைச்சாலும்….
கத்திரிக்காய் நெய் வடியும்
கருவாடு தேன் ஒழுகும்….
கோழி கொழம்பு மேல குட்டி குட்டியா
மிதக்கும்….
தேங்க சில்லுக்கு தேகம் எல்லாம்
எச்சி உறும்….
வறுமை இல நாம பட்ட வலி
தாங்க மாட்டமா….
பேனா எடுத்தேன் …பிரபஞ்சம்
பிச்சு ஏறுஞ்சேன்….
பாசம் உள்ள வேளையிலே காசு
பணம் கூடலியே….
காசு வந்த வேளையிலே பாசம்
வந்து சேரலியே….
கல்யாணம் நான் செஞ்சு கதி யத்து
நிக்கைல ,பெத்த அப்பன் சென்னை
வந்து சொத்து எழுதி போன பின்னே….
அஞ்சு, ஆறு வருஷம் …உன் ஆசை
முகம் பாக்கமா பிள்ளை மனம்
பித்து ஆச்சே…பெத்த மனம் கல்லு
ஆச்சே….
படிப்பு படிச்சிகிட்டே பணம் அனுப்பி
வச்ச மகன் கை விட மாட்டான்னு
கடைசில நம்பலயே….
பாசம்….
கண்ணீர்….
பழைய கதை
எல்லாமே வெறுச்சோடி போன
வேதாந்தம் ஆயேடுச்சே ….
நெல்லை-ல ஊரு முழுக….
வல்லோரும் சேர்த்து எழுக…கை
பிடிச்சு கூட்டி வந்து கர சேர்த்து
விட்டவளே….
எனக்கு ஒன்னு ஆனதுன உனக்கு
வேறு பிள்ளை உண்டு …உனக்கு ஒன்னு
ஆனதுன எனக்கு வேறு தாய்
இருக்கா………..?