கடவுள் சொன்னது.!

முகம் தெரியாத
ஒருவரின்
தோல்விக்கு கூட
நான் அழுகிறேன்.
என் தோல்விக்கு
கடவுள் கலங்குவான்
என்ற நம்பிக்கையில்…

முகம் தெரியாத
ஒருவரின்
பசிக்கு கூட
நான் சோர்கிறேன்.
என் பசிக்கு
கடவுள் சோரிடுவான்
என்ற நம்பிக்கையில்…
இப்படி…
அடுக்கடுக்காய்
அடுத்தவர்களின்
துயரங்களை
என்னுடையதாக்கிய பிறகு…
ஒரு நாள் கடவுளை
சந்திக்க நேர்ந்தது .
கடவுளிடம் கேட்டேன்…
உங்களை எளிதில்
சந்திக்க வழியில்லையா?

ஓ..வென்று அழுதவர்
சொன்னார்…

அடுக்கடுக்காய் …
துயரங்களை பார்த்து
வலிகளில் மூழ்கி
கண்ணீரில் மிதந்து
ரத்தங்களில் உறைந்து
உறவுகள் வீசிய
அமிலத்தில் சிதைந்து
பக்குவபட்ட மனங்களிடம்
மண்டியிட்டு கிடக்கிறேன்.

தயவு செய்து
என்னை பார்த்ததாக
யாரிடமும் சொல்லாதே…
என்றான்.

Advertisements

மௌனத்தின் மயக்கம்.!

வயலினிலே வரப்பில்லை
வந்த மழை பெய்யவில்லை
வட்டியிலே சோறில்லை
வாழ்வதற்கு வழி தெரிய வில்லை
—–இது தந்தையின் ஏக்கம் …!

மானத்துக்கு சேலையில்லை
கூரையிலே ஓலையில்லை
விழிகளுக்கு ஈரமில்லை
இமைகளுக்கு வேலையில்லை
—–இது தாயின் துக்கம் …!

கூந்தலிலே எண்ணெயில்லை
கொண்டையிலே பூவுமில்லை
கூடிச்சேர மனமுமில்லை
கொண்டவனுக்கோ ஆசையுமில்லை
—-இது தாரத்தின் துக்கம்…!

வாரிக் கொடுக்க வசதியில்லை
வான் நிலவும் சிரிக்கவில்லை
வார்த்தைக்கு அர்த்தமில்லை
வாழ்க்கையோ புரியவில்லை
—–இது என் துக்கம் …!

வாழ்வினில் ஏக்கம் -இங்கே
பாதியில் தூக்கம் ,
வசந்தமோ துக்கம் -இங்கே
வறுமையோ பக்கம் ,
நட்பிடம் மஞ்சம் -இங்கே
உறவிடம் வஞ்சம் ,
உள்ளத்தில் கலக்கம் -இங்கே
உண்மைக்கு வெட்கம்,
மௌனத்தின் மயக்கம் -இங்கே
மாறிவிட்டால் மணக்கும் .

முகவரியற்ற மனிதன்.!

ஒருநாள் நள்ளிரவில்
நான் தனித்து வருகையிலே…
காவலரிருவர் கண்களில்
சந்தேகத்துக் கிடமாய் நான்…

நீ யாரென்றார் ஒருவர்
நான் என்ன சொல்வேன்
எனக்கொன்றும் புரியவில்லை…
இந்தக் கேள்விக்குப் பதில்…

திடுமென இருவர் எதிர்வந்து
யார் நீ என்றால்
எப்படிச் சொல்வது
நான் யாரென்று

எனக்கே தெரியவில்லை
இதுவரை நான் யாரென்று
உங்களுக்கெப்படிச்
சொல்வேன் என்றேன்…

அடேய் பதரே…
எங்கிருந்து வருகிறாய்…
என்பதைச் சொல்
என்றார் ஒருவர்

எனக்கு விளங்கி விட்டது
நான் யாரென்பது
எங்கிருந்து வருகிறேன்
என்ற கேள்விக்குள்
இருக்கிறதென்று…

ஆனாலும் நினைவில்லை…
எங்கிருந்து வருகிறேனென்று…
எப்படிச் சொல்வேன்
நான் யாரென்று…

உன் முகவரியைச் சொல்
என்றார் முதலாமவர்
இப்போதாவது சொல்லலாமென்றால்
என் முகமே எனக்கு
மறந்து போயிருந்தது…
இதில் முகவரியை
எப்படிக் கண்டுபிடிப்பது…

சட்டைப் பைக்குள் இருப்பதை எடு
இது இரண்டாமவர்
ஓ… சட்டைப் பைக்குள்
இருக்கிறதா என் முகவரி…

இவ்வளவு நாள்
என் சட்டைப் பைக்குள்
என்ன இருக்கிறது என்பது
தெரியாமலேயே இருந்திருக்கிறேன்…

என் சட்டைப் பைக்குள்
எதுவுமில்லை…எனக்கு
இப்போதும் தெரியவில்லை
என் முகவரி…

முகமே இல்லாதவனைப்
பார்த்து
முகவரி கேட்டால் எப்படிச்
சொல்ல முடியும்

நான்… என்
“முகத்தைத் தொலைத்து
முகமூடியணிந்து” வெகுகாலம்
ஆகிவிட்டது…

உங்களுக்குத் தெரிந்தால்
எனக்கு மட்டும் சொல்லுங்கள்…
நான் யாரென்றும்…
நீங்கள் யாரென்றும்…

கவிதை.!

நினைத்த நேரத்தில்
வடிக்க முடியவில்லை
உன்னை

வடிக்க நினைக்கும்போது
என் நினைவில் இல்லை
நீ

இளைப்பாற அமரும்பொழுது
இருவரியாய் தோன்றினாய்
நீ

எதேச்சையாய் திரும்புகையில்
எங்கோ என்
எதிரே தென்பட்டாய்
நீ

ஆழ்ந்த தியானத்தில்
அமரும்பொழுது என்னை
அறைந்து விட்டுச்சென்றாய்
நீ

வரியற்ற வசனமாய்
வந்தவுடன் சென்று
விட்டாய்
நீ

வந்து வந்து
செல்பவளே
ஒரு முறையேனும்
உன் முகத்தை
முழுதாய் காட்டிவிடு
இல்லையேல் இன்னும்
பிதற்றிக் கொண்டு தான்
இருப்பேன்
நான் எழுதிய
இதுவும்
கவிதை என்று!!

வாழத்தான் நினைக்கிறேன்.!

Image

வாழத்தான் நினைக்கிறேன்
முடியவில்லை

இருக்கும் கஷ்டங்களை
இயல்பாக காணப்பழகி
இல்லாத செல்வமெல்லாம்
இருப்பதாக எண்ணிக்கொண்டு

வாழத்தான் நினைக்கிறேன்
முடியவில்லை

நிகழும் கொடுமைகளால்
நித்தம்நித்தம் மனம்நொந்து
நிஜமும் ஒருநாளில்
நிச்சயமாய் வெல்லுமென்றெண்ணி

வாழத்தான் நினைக்கிறேன்
முடியவில்லை

அன்பில்லாத மனிதம்கண்டு
அனுதினமும் கண்ணீர்சிந்தி
ஆசைகொண்ட மனிதவாழ்க்கை
ஆணவத்தில் புதைந்திடுமோ பிழைத்திடுமோ என்ற சிந்தனையில்

வாழத்தான் நினைக்கிறேன்
முடியவில்லை

தப்புக்கள் செய்துசெய்து
தளிர்க்கின்ற சமூகம்கண்டு
தப்பிப்பிழைத்த நீதிநேர்மை
தத்தளிக்கும் நிலை கண்டு நெஞ்சத்தை கல்லாக்கி

வாழத்தான் நினைக்கிறேன்
முடியவில்லை

பெண்கொடுமை வன்கொடுமை
புதுப்புதிதாய் தினம்நடந்து
பொன்னான பூமியெங்கோ
போகும் அவல காட்சி மறையுமென்றெண்ணி

வாழத்தான் நினைக்கிறேன்
முடியவில்லை…!

என் வலி ஈன்ற வரிகள்.!

இளவயதில்தோல்வியை ….
கண்டு துவண்டு எல்லோரையும்…..
போல் விழுந்தேன் தோலிவியின் …..
வலிகள் தெரிந்ததே தவிர ….
தோல்விகள் மறைந்திருந்த …
வரிகள் இப்போ தான் புரிகிறது ….!!!

தோல்வி என்பது ஒவ்வொரு
வாழ்க்கை வரிகள் கண்டு
கொண்டவன்
வெற்றி பெறுகிறான் ,,,,,!!!

கிரிகட் விளையாடி
அரைசதமும் அடித்தேன்
ஆட்டம் இழக்காமல் இருந்தேன்
சக ஆட்டக்காரர் பத்து பேரும்
ஆட்டமிழந்தனர் -என்னையும்
சேர்த்து ஆல் அவுட் என்றனர்

இப்போதுதான் உணர்கிறேன்
நம் தோல்விக்கும் கவலைக்கும்
நாம் காரணம் இல்லாமலும்
ஏற்படும் என்று – எதற்கு
நாம் காரணமில்லாமல் தோல்வி
அடைகிறோமோ அது
நம் வெற்றி…..!!!

கல் எறியைவிட சொல்
எறி காயத்தை மாற்றாது
சொல் எறி என்னை காய
படுத்திய போதெல்லாம்
துவண்டு விழுந்தேன் …!!!

இப்போதுதான் மீட்டு
பார்கிறேன் அவர்கள்
எறியாவிட்டால் – என்
சிகரத்தை தொட்டிருக்க
முடியாது என்பதை
அன்றைய சொல் எறிகள்
இன்று வெற்றி பூக்கள்!!!

இப்பொழுது எங்கு இருக்கிறாய்.???

Image

 

மரணங்களும் மறையவில்லை
ரணங்களும் குறையவில்லை

வலிகளும் மறக்கவில்லை
வரைமுறைகளும் தெரியவில்லை

உணர்ச்சிகள் ஆறவில்லை
உண்மைகள் தூங்கவில்லை

போகிறபாதை புரியவில்லை
போனபாதை விளங்கவில்லை

எதற்காக வந்தோம்?
எங்கே போகிறோம் ?

எல்லாம்
யோசித்துகொண்டிருக்கிறேன்

எல்லாம்
மறந்துபோகும்
நீ
அருகிலிருந்தால்!!!

என் நண்பனே
இப்பொழுது
நீ
எங்கு இருக்கிறாய்?

என்னை மன்னித்துவிடு.!

Image

 

ஒரு வயிற்றில் பிறந்தோம்
ஒன்றாக இருந்தோம்
ஒன்றாக வளர்ந்தோம்
ஒன்றாக சிரித்தோம்
ஒன்றாக அழுதோம்
ஒன்றாக உழைத்தோம்
ஒன்றாக உயர்ந்தோம்
இருப்பதை உண்டோம்
இடர்களை பகிர்ந்தோம்

எத்தனைமுறை சண்டையிட்டாலும்
அத்தனைக்கும்மதிகம் அன்பானோம்

நீ இருக்கும்போது உன்னை யாசித்தேன்
நீ இல்லாதபோது உன்னை யோசித்தேன்

உலகமே நிலா அடியை தேடுகிறது – நான்
உன் காலடியை நாடினேன்

-இன்று-

எதிரில் நீ வந்தாலும்
தாமரை இலை
தண்ணீராய் சந்திக்காமலே
கண்ணீரோடு உனை கடக்கிறேன்

உன்னிடம்
பேச துடிக்குது மனசு
எனை வெளியேற்றிய
அதிர்ச்சியில் தடுக்கிறது புத்தி

யான் என் செய்வேன்
என் சகோதரனே?

எனக்கொரு மனமுண்டு
அதிலும் சில ஆசையுண்டு
நாளைக்கு மாற்றமுண்டு
எனக்கு வெற்றியுண்டு

அன்று
நான்
வருவேன்
வெற்றிகளை
கொண்டாட
‘உன்னோடு’

அதுவரை
என்னை
மன்னித்துவிடு…………………………..

நான் வேண்டும் வரங்கள்.!

நான் வேண்டும் வரங்கள்:-
*தினம் தினம் பௌர்ணமி….
*நினைத்த உடன் மழை…….
*சாலையோர பூக்கள்……
*அதிகாலை பனித்துளி…….
*இரவு நேர மெல்லிசை…….
*கள்ளமில்லா சிரிப்பு……..
*பொய்யில்லா நட்பு……
*தினம் நூறு கவிதைகள்…….
*கவலையற்ற கல்லூரி நாட்கள்…….
*தோள் சாய உண்மையான தோழன்…..
*பாசம் உள்ள சகோதரன்…….
*தாய் மடி தூக்கம்……
*தூக்கத்தில் மரணம்………

நான் ரசித்த ஒரு நாள் மழை..!

Image

இலேசாகவே தூர
ஆரம்பித்தது மழை…
கீழ்வானிலே அழகாய்
ஒரு மின்னல் கீற்று…

தொலை தூரத்தில் எங்கோ
முழங்கிய இடியோசை
மழை விட்டும் கூட தூவானம்
இன்னும் விடவில்லை…

எங்கிருந்தோ சற்று இதமாக
வீசிய தென்றல் வழியே…
கண்ணாடி இடுக்கினூடே
உள் நுழைந்த சாரல்…

முகங்களையும், காதூகளையும்
வருடிச்சென்றது மட்டுமல்லாமல்
எல்லா இடங்களிலும் ஈரங்களை
கொண்டு சேர்த்தது…

சாரல் எங்கும் பரவத் தொடங்க
மெதுவாக ஜன்னல்களை மூடினேன்
கண்ணாடியில் இன்னும் பெய்து
கொண்டுதான் இருக்கிறது மழை…

கையில் ஏந்திய தேனீர் கப்புடன்
ஜன்னல் அருகே அமர்ந்து…
என் முடிவற்ற தனிமை வழியே
ரசித்துக் கொண்டிருந்தேன் மழையை…

பச்சை இலைகள் மழைத்துளிகளால்
ஈரமும், குளிருமாய்
தலை துவட்டாமலே
மரங்கள்…
செடிகள்…
கொடிகள்…

மழை நின்ற பின்னும்

இந்த இதமான தனிமை
இன்னும் சற்று நேரம்
நீள வேண்டுமென என்
உள்ளமும் ஏங்கியது…

“அந்த ஒரு நாள் மழை”