எழுதுகிறேன்….

எழுதுகிறேன்……….
ஆழமாய் தமிழ் படித்து
ஆணித்தனமாய் சொல்லெடுத்து
எதுகை மோனை எடுத்து வைத்து
உனை அப்படியே கவரும்
ரசனைக்குரிய கவி
நானல்ல என்று….
இருப்பினும் எழுதுகிறேன்
அளவாய் தமிழ் படித்து
உண்மையாய் உன் நினைவெடுத்து
கண்ணீர் கறையை எடுத்துவைத்து
உனை முழுவதுமாய் நேசிக்கும்
ரசனைக்குரிய ரசிகன்
நான் மட்டுமே என்று……………

Advertisements

அடிவாங்கலாம் அப்பாவிடம்.!

Image

 

அப்பா அடித்துவிட்டார்
வலிக்கிறதுதான்.
என்றாலும்
தடவிக் கொடுக்கும் அம்மா
பாவமாயிப் பார்க்கும் அக்கா
பயத்தில் அழும் தம்பி
இன்னும்கூட அடிவாங்கலாம் அப்பாவிடம்..!

காதலர்கள் கவனத்திற்கு.!

அன்புள்ள காதலர்களே !

காதல் வந்ததும்
வாழ்க்கையில் வென்றவர் பலர் !
காதல் வந்ததும்
வாழ்க்கை தொலைத்தவர் சிலர் !

வாழ்வென்னும் வசந்தத்தில்
பூக்கள் தான் காதல் !

காதல் எப்படி வந்தது ?
காதல் எப்போது வந்தது ?
காதல் ஏன் வந்தது ?
என்று கேட்கவில்லை !
காதல் வந்துவிட்டது !
வாழ்த்துக்கள் !

பூங்காவில் பூச்செடி
மறைவில் என்ன காதல் ?

கையை பிடித்துக் கொண்டே
போகிறாயே ஏன் ?
ஓடிவிடுவார்களா ?

இருசக்கர வாகனத்தில்
இரண்டு இருக்கைதான் உள்ளதே
முதுகில் ஏறி ஏன்
பயணம் செய்கிறீர்கள் ?

இரவு பகல் பாராது
தொலைபேசியில்
என்ன பேசுகிறீர்கள் ?

காதலில் கண்ணியம்
என்பது இல்லையா?

காதல் என்பது
புனிதம் இல்லையா?

தன் மனைவியே ஆனாலும்
தனியிடம் வேண்டாமா ?

பொது இடத்தில்
ஏன் இந்த உரசல் !

ஒரு குழாயில்
உறிஞ்சி குடிப்பதுதான்
காதலா?

திருமணத்திற்கு முன்பே
காதலன் கைபிடித்து
சுற்றுவதுதான்
பெற்றவர்களுக்கு பெருமையா?

தமிழ் இலக்கிய காதல்
படிக்கவில்லையா ?

காதலில்
கற்பு
சுயமரியாதை
எதிர்காலம் இல்லையா ?

பெற்று வளர்த்த தாய் மீது
தோளில் சுமந்த தந்தை மீது
கற்று கொடுத்த ஆசிரியர் மீது
காதல் இல்லையா ?

மனம் கவர்ந்த
மங்கையை மணந்து கொள் !
காதல் இருபது வயதில் இல்லை !
அறுபது வயதில் தான் பூக்கிறது !
அதுவரை மொட்டாகதான் இருக்கிறது !

பண்பாடு கெடுக்காத
காதலர்களே
உங்களை வணங்குகிறேன் !

அன்புள்ள காதலர்களே !
காதல்
திருமணத்திற்கு பின்
மனைவியோடு மட்டும்
வரவேண்டியது !

இதுமட்டும் தான்
வாழ்க்கையை வசந்தமாக்கும் !

பருவ மாற்றமும்
ஹார்மோன் ஊட்டமும்
வாழ்க்கையை பறித்துவிட கூடும் !

என் உயிர் தோழனுக்காக.!

Image

கல்லில் வடித்த கவிதை போல….,
வானவில்லின் ஓவியம் போல….,
பேசும் பொற்சித்திரம் போல….,
இருளுக்குபின் வரும் ஜோதி போல….,
இதுவரை சொல்லாத கவிதை….
என் உயிர் தோழனுக்காக………………..!

தேவையின் போது தோள்களில் சாய…..,
துன்பத்தில் கண்ணீர் துடைக்க…..,
இன்பத்தை பகிர்ந்து கொள்ள
உள்ளத்தால் நினைக்கும்
உன் போன்ற நட்பு,
என் உயிருள்ளவரை வேண்டும்……!

திட்டினாலும் அடித்தாலும் முறைத்தாலும்
தாங்கி கொள்வான்……..,
அதிகமாக அழவைத்தும் சிரிக்க வைப்பான்
பேச பழக திட்ட கொஞ்ச
உரிமை தோழன்…….!

இனி உன்கைகளை பிடித்தபடி
கவலையின்றி நடப்பேன்
கடைசிவரை துணையாய் நீ
வருவாய் என்ற நம்பிக்கையுடன்……….!

நீ மௌனமாய் அழும் ஒவ்வொரு
நொடியும் உடன் இருப்பேன்
உன் கண்ணீரை துடைக்க
உரிமை தோழனாய்………………!

இனி உன் மனம்
சோர்ந்து போகும் போதெல்லாம்
உன் தாய்மடி தேவையில்லை……,
சோகம் தீர்த்து தோள்கொடுக்கும்
அன்புத் தோழனாய்
என்றுமே உன்னுடன் நான்…………….!

மரணமே வந்தாலும்
உன்னை மறக்காத இதயம்………..!
மறந்தும் நினைத்து விடாதே…
உன்னை மறப்பேன் என்று…………!

மீண்டும் ஒரு ஜென்மமிருந்தால்
என் தோழனாக நீ வேண்டும்……….!

என் துன்பங்களையும்
உன் தோளில் சுமந்தவனே
நீ எனக்கு நண்பன் அல்ல…….!
இன்னொரு தகப்பன்……..
உள்ளம் மறக்குதில்லை உன்னை………..!

நிரந்தர உறவுகள்.!

Image

 

எண்ணத்தின் ஆசைகள்
கைக்குள் அடங்கவில்லை…
எல்லையற்று கடந்து செல்கிறது
நினைவுகளின் ஊடறகம்!

வலிதான் மொழியாகிறது..
அதன் வாசலில் கண்ணீர்தான் முதலில் சுவாசிக்கிறது!

தனிமையோடு விளையாட..
அங்கு தென்றல் அழைக்கிறது!

இனிமைகள் பல பேச..
கண்விழிகள் எதையோ எதிர்பார்க்கின்றது!

மின்மினியாக வந்துபோகும் நண்பர்களில்
எவரேனும் சிலர்மட்டும்தான் நெஞ்சத்தில் நிரந்தரமாக…..

கவலைகள் பல இருந்தாலும்
நமக்காக பிராத்தனை செய்யும் தாயும்…

வலிகள் எல்லைகடந்தாலும்
தனக்காக கண்ணீர்விடும் தாரமும்தான்
இந்த உலகின்
நமக்கான நிரந்தர உறவுகள்…..!!!

நீ இல்லா இரவுகள்.!

எவரிடமும் வாதிடமுடியா
சொல்லி பகிரமுடியா
பின்னிக் குமையும்
எண்ண சிக்கல்களை
நீ இல்லா இரவுகளில்
உன் நீங்கா நினைவுகளுடன்
பகிர்ந்து கொள்கிறேன்……!

இரவுகள் வெளித்த பின்னும்………..

மோகத்திமிரில் மீட்டிய
ராகங்களும்……
மௌன புன்னகையில்
பேசிய பாசைகளும்……
செங்காந்தள் பூவிதல்களில்
பருகிய தேனும்……
உயிர் குடிக்கின்றன…….

இரவுகள் வெளித்த பின்னும்…………….

எழுதப்படாத விதியில்
சொல்ல படாத
உன் மரணம்……..!

தொடரும் சாபங்களால்
தீர்க்கப்படாத தீர்மானங்கள்….!

நான்……
நிதானித்து எழும்
வேளைகளில்………
என் கண்முன்னே
உன் மாறாப்புன்னகைகள்…….!

நீ இல்லா இரவுகள்…….
நீள்கின்றன
சிரிக்கின்றன
அழுகின்றன
அனுதாபிக்கின்றன
ஆளாபிக்கின்றன

ஆம்………..
நீ இல்லா இரவுகள்…..
எனை சுடுகின்றன………………!

வானம் வெளித்த பின்னும்…….!

காதல் தந்தால் என்ன தருவாய்.??

உன் ஒரு வார்த்தை
நலம் விசாரிப்பில்
உருகி கரையும் உள்ளத்தில்
நிறைந்திருப்பது நீ மட்டுமே
என்று சொன்னால்
என்ன செய்வாய்…

ஓராயிரம் வார்த்தைகளில்
என்னை வரைவாயா
இல்லை
ஒரேயொரு முத்தத்தில்
என்னை கரைப்பாயா

விரல்கூட தீண்டாமல்
என்னை உணர்வாயா
இல்லை
மடிமீது நதியாக
என்னை வளைப்பாயா

கைகோர்த்து நிழலாக
துணை வருவாயா
இல்லை
மார்புச் சிறகினிலே
என்னை அணைப்பாயா

இவையெல்லாமும் நீ தருவாய்
என்று அறிந்திருந்தும்
உள்ளம் சொல்லத்தான்
தைரியம் இல்லாமலே
மொழியில்லாமல்
என்னுள்ளே உறைந்துவிட்டேன்..

நம் நட்பு.!

Image

பிரசவத்தின் வேதனையை மறந்து
குழந்தையின் அழுகுரல் கேட்டதும்
தாயின் முகத்தில் தோன்றும்
புன்னகையுடன் பிறந்தது
நம் நட்பு !
பார்க்காமல் வருவது காதல்
கை கோர்த்து நடப்பதுதான் நட்பு
என்ற மூடர்களின்
பேச்சுக்களைத் தாண்டி
வானத்தில் கை கோர்த்து
மிதந்து கொண்டிருந்தன
நாம் பகிர்ந்து கொண்ட வார்த்தைகள் !
ஆண் -பெண் பேதங்கள் பார்க்கும்
மனிதர்களின் கூட்டத்தில்
அதன் எல்லைகளைக் கடந்து
பயணித்துக் கொண்டிருப்பவர்க
ளுடன்
நாமும் இணைந்து கொண்டோம் !
வார்த்தைகளைக் கவனமாகப் பேசி
உறவுகளை நீட்டிக்கும்
கட்டாயத்தின் நடுவே
உனக்கான வார்த்தைகளை
எந்தக் கட்டுப்பாடும் இன்றி
சுதந்திரமாய் பேச வைத்தாய்!
நேற்று பிறந்த
குயில் குஞ்சின்
மழலைக் கூவலைக் காட்டிலும்
இனிமையானவை
நம் வார்த்தைகள்
வாக்குவாதங்கள்!
தேவையற்ற விவாதங்களுக்கு
இடையிலான இடைவெளியை
உன் சிரிக்க வைக்கும் சொற்களால்
நிரப்பி விடுவாய்!
நட்பு கொள்வது
ஒருவரை முழுமையாய் சந்திப்பது
என்பதை உணர்ந்த பொழுது
நாம் பிரிக்க முடியாதவர்களாகி
விட்டோம்!
புதிதாய்
மொட்டு விரித்திருக்கும்
முல்லைப் பூவின்
இதழ்களைக் காட்டிலும்
தூய்மையானவர்களாகிவிட்டோம்!
நான் அறியாமல்
நீ என்னை கை விடும்
சிறு பொழுதில்
நம் பிரியத்தின் கனல்
எரியத் தொடங்குகிறது !
இருந்தும் நான் என்னை
ஆற்றிக் கொள்வேன் ..
என் இறுதி முச்சின்
வெப்பத்தையும்
அருகிலிருந்து உணர்பவன்
நீதான் என்று !
காலத்தின் கட்டாயத்தில்
நமது உயிர் பிரியும் தருவாயில்
நம் நட்பினைப் பிரித்து விட்டதாய்
எமன் குதூகலிக்கலாம்…
ஆனால்,
சருகாகி
மண்ணினுள் மக்கிப் போகும் வரை
பிரியாதிருக்கும்
இலையும்-நரம்பும்..
நமது கல்லறையில்
பூத்திருக்கும்
மஞ்சள் நிற பூக்களும்
என்றென்றும்
நம் நட்பின் வாசனையை
பரப்பிக் கொண்டிருக்கும் !!

தூக்கமும் ஒரு துணைதானே.!

mrvug_180655

தூக்கமும் ஒரு துணைதானே

உறக்கத்திற்கு தடைபோட
முயன்றேன் முடியவில்லை…..!

காலம் நாளை காலை
கடமை என
கட்டளையிட்டது……………………….!

கண்டிப்பாக இது இந்த
நாளுக்கு விடைகொடுக்கும்
நேரம் தானே……………………………….!

கணவிலும் என்காதலியாக
கவிதையே வருவதற்கு
கண்களை மூடுகிறேன்…………….!
.>>>இரவு வணக்கம்

விழி ஒரமாய் ஒரு நீர் துளி.!

wyjtq_179127

அவள் கொடுத்த முத்தங்கள்
முத்துக்களாய் வந்தன
என் கண்களில் !
மீண்டும் கொடுத்து கொண்டேன்
என் கன்னத்தில் !

புகை பிடித்து நான்
புதைக்க பார்த்தேன் அவள் நினைவை !
மீண்டும் பூ பூத்தது
அவள் புன்னைகையின் நீர் ஒட்டம்
என் கண்களில் !

மது அருந்தி நான்
மறக்க பார்த்தேன் அவள் நினைவை – இல்லை
மார்போடு அனைத்து கொண்டேன் !
“அவள் கூந்தல் மணமானது
என் மனதுக்கு மருந்தானது”

வார்த்தைகள் வலிகலாயின !
என் வீட்டு வாசற்ப்படிகள்
ஏக்கத்தில் சரிந்தன !

திரும்ப அவள் வருவாளா ?
திருத்தம் செய்வாளா ?
சொல்லவது சரிதானா ?
“மனதுக்குள் போராட்டம்”

அவள் நினைவை சுமக்கும்
பொய் உலகத்தின்
ராஜா நான் !
அவள் வலியில் சிரிக்கும்
நிஐம் உலகத்தின்
பித்தன் நான் !